வியாழன், 10 நவம்பர், 2022

55,000 மி.லி தாய்ப்பால் தானம் செய்த கோவை அமைப்பு . பயனடைந்த 1,500 குழந்தைகள்.. குவியும் பாராட்டு !

kalaignarseithigal.com  -  KL Reshma  :  தமிழ்நாடு  ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம்; இரத்த தானம்; உடல் உறுப்பு தானம் என்பதையும் கடந்து தற்போது 'தாய்ப்பால் தானம்' என்று உருமாறி வருகிறது. தாய்ப்பால் தானம் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலமுடன் வாழ வழிவகை செய்ய முடிகிறது.


எனவே பெண்கள் தங்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலை தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பிற குழந்தைகளும் நலம் பெற வேண்டும் என்று எண்ணி அதனை சிலர் தானமாக செய்து வருகின்றனர். மேலும் இதற்காக தாய்ப்பால் தானம் குழுக்களும் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் தாய்ப்பால் தானம் கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் சுமார் 35 தாய்மார்கள், தங்கள் குழந்தைக்கு அளித்தது போக, தங்களிடம் சுரக்கும் பாலை கொடையாக வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது தாய்ப்பாலை தானமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அளித்து வருகிறார்.
\கோவை மாவட்டம் கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா. பொறியியல் பட்டதாரியான இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் அந்த குழந்தை முதலில் ஃபார்முலா மில்க்தான் உட்கொண்டது. எனவே குழந்தைக்கு சிந்து பம்ப் மூலம் பால் கொடுத்துள்ளார்.
55,000 மி.லி தாய்ப்பால் தானம் செய்த கோவை பெண்.. பயனடைந்த 1,500 குழந்தைகள்.. குவியும் பாராட்டு !

இதையடுத்தே இவருக்கு தான், தாய்ப்பால் தானம் செய்யலாம் என்ற சிந்தனை உதிர்த்துள்ளது. அதனை தனது கணவரிடம் கூற, அவருடன் சிந்துவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். சிந்துவுக்கு குழந்தை பிறந்து தற்போது 19 மாதங்கள் ஆகிறது.

இவர் குழந்தை பிறந்த 100-வது நாள் முதல் தனது தாய்ப்பாலை தானம் செய்து வருகிறார். அதன்படி 'அமிர்தம் தாய்ப்பால் குழு' என்பது மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். தொடர்ந்து தனது குழந்தைக்கு போக தாய்ப்பாலை தானமாக அளித்து வரும் இவருக்கு அவரது குடும்பமே ஆதரவு அளித்துள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், தங்கள் குழந்தைக்கு சில நேரங்களில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். அப்போது இது போன்ற தாய்ப்பாலை மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தி வந்துள்ளது. இவரது இந்த பெரும் சாதனையால் தற்போது வரை அவர் ஒரு ஆண்டில் மட்டுமே சுமார் 55,000 மி.லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளார்.

மேலும் இதன்மூல 1,500 பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இவரது இந்த செயலை சாதனையை அங்கீகரிக்கும் விதமாக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவரை கெளரவித்துள்ளது.

இவரது சாதனையை குறித்து சிந்து பேசுகையில், "பலரும் தாய்ப்பால் தானம் செய்ய முன்வந்தாலும், அதற்கான பை கூட வாங்க முடியாத சூழலில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு தாய்ப்பால் தானம் செய்வதற்கான பேக் வாங்கித் தரலாம் என்றும் எண்ணியுள்ளேன்.

தாய்ப்பாலின் அருமை அது கிடைக்கப்பெறுபவர்களைவிட, கிடைக்கப்பெறாத குழந்தைகளின் அம்மாக்களுக்குத்தான் தெரியும். தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறப்புகூட நடக்கிறது. தாய்ப்பால் தானம் மூலம் அவற்றைத் தடுக்க முடியும். இரண்டாவது குழந்தை பிறந்தாலும், என்னால் முடிந்தவரை தாய்ப்பால் தானம் செய்வேன்" என்றார்.

கருத்துகள் இல்லை: