சனி, 16 ஜூலை, 2022

பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகாவின் கடந்த கால சறுக்கல்கள் .. தெரியாத பக்கங்கள்

Sarath Fonseka Joins Sri Lankan Government, Likely To Be Inducted As  Minister

Ashroff Ali-அஷ்ரப் அலீ  : பதவிக்காக அணிமாறாத சரத் பொன்சேகா?
சரத் பொன்சேகா ஆரம்ப காலத்தில் இடதுசாரி ஆதரவாளர். ஆனால் பின்னர் ராணுவத்தில் அதிகாரியாக சேர ஐ.தே.க. ஆதரவாளோக மாறியவர்..
அதன் காரணமாக 1970ம் ஆண்டு பெப்ரவரி,  பிரதமர் டட்லியின் காலத்தில் ராணுவத்தின் கடேற் அதிகாரியாக இணைந்து கொண்டார்.
பின்னர் 1970 மே 29ம் திகதி ஶ்ரீமாவோ அம்மையார் பதவிக்கு வந்ததும் சுதந்திரக் கட்சி ஆதரவாளனாக மாறி பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலகுவான பதவி உயர்வுகளுக்கு வழி செய்து கொண்டார்.
அக்காலத்தில் ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கும் செயற்பாடுகளின் போது அதன் முக்கியஸ்தர்கள் சிலருடன் நெருக்கம் ஏற்பட்டது.,
தென்னிலங்கையின் ஜே.வி.பி. ஆதரவுத்தளமும் அதற்கான காரணமாக இருக்கலாம்.


அதே நேரம் 1971 கிளர்ச்சியை அடக்க களமிறக்கப்பட்ட பிரதமர் ஶ்ரீமாவோவின் ஒன்றுவிட்ட தம்பி கேணல் ரத்வத்தையுடன் நெருக்கமான உறவுகளையும் பேணியிருந்தார்.
1978ல் ஜே.ஆர்.ஜயவர்த்தன பதவிக்கு வந்தவுடன் மீண்டும் ஐ.தே.க.பக்கம் சாய்ந்து விட்டார். அதன் காரணமாக 1988-89களில் ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கும் பணிகளில் சரத் பொன்சேகாவும் முக்கிய பங்கு வகித்தவர். ஆனால் முக்கிய ஜே.வி.பி. தலைவர்களை தப்ப விட்டார் என் பழிச்சொல்லும் அவர் மீது உண்டு. கிளர்ச்சி காலத்தில் அவர் மறைமுகமாக ஜே.வி.பி. ஆதரவாளர்.

1990 ஜே.வி.பி. கிளர்ச்சி அடக்கப்பட்டதும் மீண்டும் ஐ.தே.க. ஆதரவாளர்.

1994-2000 ஆரம்பத்தில் ஐ.தே.க. ஆதரவாளர் மற்றும் அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்பவர் என்பதன் காரணமாக சந்திரிக்கா இவரை பெரிதாக நம்பவில்லை. ஆனால் 1971-77 காலப் பகுதியில் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக ரத்வத்தே நம்பினார். அதன் காரணமாக யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தேடி வந்தது. பின்னர் வடபிராந்திய கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.
2002=2004 ரணிலின் பதவிக்காலத்தில் மீண்டும் ஐ.தே.க.ஆதரவு. அதன் காரணமாக சீனியாரிட்டி அடிப்படையில் ராணுவத்ததளபதி பதவிக்கு தகுதி இருந்தும் சந்திரிக்கா இவரை நியமிக்கவில்லை.  சாந்த கோட்டேகொடவுக்கு பதவி நீடிப்பு வழங்கினார்

யுத்த நிறுத்த காலத்தில் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
2005 டிசம்பரில் கோட்டாபயவுக்கு பின்னால் அலைந்து திரிந்து இராணுவத் தளபதியானார்.
2009- தன்னை ராணுவத்தளபதியாக்கி அழகு பார்த்த மஹிந்த,  கோட்டாவுக்கு எதிராக அணிமாறினார்
2010 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி சார்பாக பொதுவேட்பாளராக களம் இறங்கினார்
2015 -தனிக்கட்சியில் கேட்டு தோற்றுப் போனார். ரணிலை வானளாவப் புகழ்ந்து ஐ.தே.க. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தார்.

2019 -ரணிலை கன்னாபின்னாவென்று திட்டி சஜித்துடன் அணி சேர்ந்தார்
2021-2022 காலப்பகுதியில் தன் பரம வைரியாக வெளியில் காட்டிக் கொள்ளும் கோட்டாபயவுடன் இரகசியமாக நெருக்கமான தொடர்பில் இருந்தார். அதன் காரணமாக பிரதமர் பதவியை ஏற்குமாறு ரணில், சஜித்துக்கு முன்னர் இவரைத் தான் கோட்டா அழைத்தார்
2022- அரகல(போராட்டக்களம்) ஆரம்பமாகி ஜனரஞ்சமாகத் தொடங்கியதும் ஜே.வி.பி. உடனான தொடர்புகளைப் புதுப்பித்து சஜித்தை கடுமையாக விமர்சித்தார். போராட்டக்களம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் தான் அதன் மூலம் ஜனாதிபதியாக கனவு கண்டார். கனவு பலிக்காமல் போக மீண்டும் சஜித் இடம் அடைக்கலம் புகுந்தார்

2022-ஜூலை இப்போது ரணில் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்றவுடன் அவருக்கு சாமரம் வீசத் தொடங்கியுள்ளார்.
இதற்கு மேல் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஏராளம் இருந்தாலும் ஊடக தர்மம் கருதி எழுத மாட்டேன்.
(சரத் பொன்சேகா பதவிக்காக கட்சி மாறக் கூடியவர் அல்ல என்று வாதாடும் நண்பர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். முதலில் வரலாற்றைத் தெரிந்து விட்டு வாருங்கள் )

கருத்துகள் இல்லை: