சனி, 16 ஜூலை, 2022

பல்லவ மன்னன் மானவம்மனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்

 Mr Clean - மிஸ்டர் க்ளீன் :  ரணில் சொன்ன மானவம்ம ராஜாவின் கதை..!
மானவம்ம ஒரு காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் அனுசரணையில் எந்தச் சிரமமும் இல்லாமல் இலங்கையை வீழ்த்திய ஒரு மன்னன் என்று கூறப்படுகிறது.
அந்த உதாரணத்தை ரணில் சும்மா சொல்லவில்லை, மிகுந்த அர்த்தத்துடன் தான் சொன்னார். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே இக் கதையைச் சொன்னார். இந்த மானவம்ம மன்னனைப் போலவே தானும்  எதிர்காலத்தில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாக வெளிப்படுத்திய சமிக்ஞைதான் அது. அப்போது மக்களுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்திருக்கும். ஒற்றைத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் உதவியில் நாடாளுமன்றம் நுழைந்த அவர் இன்று இந்நாட்டின் பிரதமர் ! ரணிலின் ராஜதந்திரத்துக்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு !
புராதன இலங்கையில் மக்களால் ஒருமுறை தோற்கடிக்கப்பட்ட மானவம்ம மன்னன் அதே மக்களை பூஜ்ஜியமாக்கித்  தோற்கடித்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினான்.


இந்தக் கதையின்  உட்பொருள் என்னவென்றால், தேவைப்பட்டால்
மக்கள் ஆதரவு இல்லாமலும்
ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதாகும்.
அதாவது மக்களை 'By pass' செய்யலாம்.
'நீங்கள் ஆங்கிலத்தில்  சிந்தித்துத் திக்கித் திக்கிச் சிங்களத்தில் உரையாடும் ஒரு தலைவர், உங்களுக்குச் சிங்கள பெளத்தக் கலாசாரம், பாரம்பரியம் பற்றிய அக்கறையோ ஈடுபாடோ இல்லை, அதனால்தான் மக்கள் உங்களைத் தொடர்ந்து தோற்கடிக்கின்றனரா ?" என்று ஒரு பெண் ஊடகவியலாளர் ரணிலிடம் எழுப்பிய எரிச்சலூட்டும் கேள்விக்கு ரணில் சற்றும் ஆத்திரப் படாமல் புன்னகைத்தபடி 

"சரி, மானவம்ம ராஜாவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?" என்று அந்த ஊடகவியலாளரிடம் திரிப்பி ஒரு வினாவைத் தொடுத்ததும் அந்தப் பெண்ணும் மற்றைய இரண்டு ஆண் ஊடகவியலாளர்களும் அதற்கான பதில் தெரியாமல் திகைத்துப் போயினர்.. சில நிமிடங்கள் கடும் மவ்னம் !  
அதைத் தொடர்ந்துதான் இந்த மானவம்ம மன்னனின் கதையைச் சொன்னார் ரணில்.
இலங்கை மக்களால் தோற்கடிக்கப்பட்ட மானவம்ம மன்னன் இந்தியாவுக்குத் தப்பியோடி, அங்கு படைகளைத் திரட்டிக்கொண்டு சில ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்து பெரிய சண்டைகள் ஏதுமில்லாமல் மிகவும் இலகுவாகவே இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினான்.
மானவம்ம மன்னனின் வழிமுறையில்தான் ரணிலும் இம்முறை பிரதமராகியுள்ளார்....

கருத்துகள் இல்லை: