செவ்வாய், 12 ஜூலை, 2022

அதிமுக பலவீனப்படுவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல: திருமாவளவன்

Thol thirumavalavan | Life | Politics | History | News | Works | தொல். திருமாவளவன் வாழ்க்கை வரலாறு: அரசு ஊழியர் முழு நேர அரசியல்வாதியாக மாறிய கதை  - முழுமையான தொகுப்பு
மின்னம்பலம் : அதிமுக பலவீனப்படுவது அக்கட்சிக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (ஜூலை 11) செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பலவீனப்படுவது அக்கட்சிக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுகவின் பலவீனத்தை சங் பரிவார் அமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சங் பரிவார் அமைப்பு வலிமை பெறுவது தீங்கு விளைவிக்கும். தென்னிந்திய மாநிலங்கள் தான் பாஜகவின் அடுத்த இலக்கு என்று அமித் ஷா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டை மனதில் வைத்தே அவ்வாறு பேசியிருக்கிறார்.
இத்தனை காலமாக தமிழகத்தில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனிலளிக்கவில்லை. ஆனாலும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். மதத்தின் பெயரால் பகைமையை வளர்க்கிறார்கள். வெறுப்பு அரசியலை திட்டமிட்டு பரப்பி கொண்டே இருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் இவையெல்லாம் முன்னெடுத்த நிலையில், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் திட்டமிட்டு இவற்றை செயல்படுத்தி வருகிறார்கள். ஆகவே இந்த சூழலில் அதிமுக பிளவுப்படுவது நல்லதல்ல. இதனை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் தலைவர்களுக்காக நான் சொல்லவில்லை. தொண்டர்களுக்காக சொல்கிறேன்.” என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கை நிலவரம் குறித்து திருமாவளவன் கூறுகையில், ”இலங்கையில், சிங்கள பெளத்த பேரினவாத பாசிஸ்ட்டுகளை, இன்று சிங்கள மக்களே விரட்டி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அரை நூற்றாண்டு காலமாக இனவாத வெறுப்பு தான் அடிப்படை காரணம். ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் என்கிற அடிப்படையில் அரசியல் ஆதாயத்திற்காக கொள்கைகளை உயர்த்தி பிடித்து, தமிழ் இனத்திற்கு எதிரான இனவெறியை கட்டவிழ்த்து விட்டதனால் பொருளாதாரத்தில் மிகப்பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

இந்தியாவிலும் அதேபோல ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே மதம் என்ற பாசிஸ அடிப்படைவாதத்தை சங் பரிவார அமைப்புகள் முன் வைக்கின்றன. இலங்கையில் நடைபெறும் இந்த கொந்தளிப்பு, மக்கள் போராட்டம் இந்தியாவிற்கும், சங் பரிவார அமைப்புகளுக்கும் பொருந்தும் என்ற விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறது” என்று எச்சரித்தார் திருமாவளவன்.

-கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: