ஞாயிறு, 10 ஜூலை, 2022

திராவிட சினிமா - பராசக்தி இல்லயாம் பரா சத்தியாம்?

 ராதா மனோகர் : திராவிட சினிமாக்கள் அரங்கேற்றிய சமூக புரட்சி பற்றி இன்று பெரிதாக பேசப்படுவதில்லை.
மாறாக ஆரிய பார்ப்பனீய சினிமாக்கள் ஏதோ மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை விதைப்பதாக பொதுவெளியில் பரப்புரை நடக்கிறது
அன்றைய திராவிட சி
னிமாக்கள் வெறும் சமூக சீர்திருத்தங்களை தாண்டி ஒரு சிந்தனை புரட்சியை நடத்தி காட்டியிருக்கிறது
இன்று கூட நினைத்து பார்க்க தயங்கும் பல விடயங்களை திராவிட சினிமாக்கள் அன்றே மக்களின் மனங்களில் பதித்து விட்டிருக்கிறது
வட  இந்தியாவில் மதவாதம் கொழுந்து விட்டு எரிகிறது  . ஜாதியும் மதமும் கொலைகள்  மூலம் விவாதிக்கப்படும் அளவுக்கு அவை தவறான பாதையில் வெகு தூரம்  சென்றுவிட்டன
மறுபுறம் தென்னிந்தியாவை நோக்கினால் .. குறிப்பாக தமிழ்நாட்டை நோக்கினால் இந்த சிந்தனை வளர்ச்சி வெகு தெளிவாகவே தெரிகிறது  
தென் இந்தியா கல்வியிலும் சமூக வளர்ச்சியிலும் பல மடங்கு முன்னே சென்று கொண்டிருப்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்   
துணைக்கண்டத்தின் ஒட்டு மொத்த சினிமா வரலாற்றை நோக்கும் பொழுது திராவிட சினிமாவின் தாக்கம் பற்றி சிந்திக்காமல் நகரவே முடியாது
ஒரு மக்கள் நலன் சார்ந்த கோட்பாட்டை திரைப்படங்கள் மூலம் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சென்றது திராவிட சினிமாக்கள்தான்
ஹிந்தி வங்காளி படங்கள் பல நல்ல கருத்துக்கள் செறிந்த சினிமாக்களை அளித்திருக்கிறது
ஆனால்  மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசியல் கோட்பாட்டை சாதாரண மக்களுக்கும் புரியும்  வண்ணம் , அவர்களின் மனங்களில் பதியும் வண்ணம் திரைப்படமாகவும் அதில் வரும்  பாடல்களாகவும் எடுத்து சென்று பெருவெற்றி பெற்றது திராவிட சினிமாக்கள்தான்  
இந்த இடத்தில் எவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கலைஞர் மு  கருணாநிதி என்ற ஒரு யுக புருஷனின் பெயரை உச்சரித்தாக வேண்டிய கடமை  இருக்கிறது
அவரின் ஒரு பராசக்தி ஏற்படுத்திய திராவிட சமூக சிந்தனை  புரட்சி பற்றி படிக்காமல் எந்த மேதாவியும் திரைப்படங்கள் பற்றியும் பேச  முடியாது
அரசியல் பற்றியும் பேச முடியாது சமூகம் பற்றியும் பேச முடியாது
1953   ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில்  பராசக்தி படத்தை பற்றி  பழம்பெரும் இலங்கை தமிழ் பத்திரிகையான இந்து சாதனம் இதழில் வெளியான  விமர்சனம் பல செய்திகளை கூறுகிறது
அந்த விமிர்சனத்தின் சிறு அறிமுகம் இங்கு தந்துள்ளேன்
முழு விமர்சனமும் ஒரு படு பிற்போக்கான தாக்குதலாகவே வெளியாகி இருக்கிறது
அன்றைய  சனாதன சிந்தனை போக்கை இந்த விமர்சனம் தெளிவாக காட்டுகிறது .
பராசக்தி  இவர்களை எவ்வளவு நோகடித்திருக்கிறது என்பதை அறிய இந்த பதிவு உதவக்கூடும்
இந்து சாதனம் :
பராசத்திப் படமாம்! புதுமை என்ற போர்வையில் பழிமொழி பரநிந்தை
பராசத்தியாம் அங்கு இடமில்லையாம் . என்று தெருவிலும் திண்ணையிலும் பேச்சு ஆரம்பத்து விட்டது
இப்படியே முன்னர் சிந்தாமணி பின்னர் வாழ்க்கை என்ற படங்கள் அபிமானத்தை கிளப்பின
இப்படத்தை  போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. ஏதோ கண்டனமென்றும் சண்டமாருத  சொற்பெருக்கென்றும் அதில உணர்ச்சி கொள்ள பலர் தூண்டியும் ஊக்கம்  கொள்ளவில்லை.
காரணம் பராசத்தி என்ற புனை நாமம் .தெய்வப்பெயர் கொண்ட ஒர் கதை தெய்வத்தன்மையை சித்திரிக்கும் வகைதாயல்லவா இருக்கும் ?
அவ்வாறில்லாது ஒரு பொழுது போக்குக்கு உள்ளத்தை புலரசெய்யும்படித்தானது என்று ஊகிக்க தக்கதாயிருந்தது
ஆனால்  இப்படம் மக்களிடையே விபரீத மனப்பான்மையை உண்டுபண்ணி விடுமென்றும் சைவ  நிந்தை திரைமறைவில் நடைபெறுவதால் தீமையாகும் என்று பலர் அஞ்சி இந்துசாதனம்
இதழிலில் இதற்கான தடையை காணோம் என்று கவலை கொண்டார்கள்  எனவே படத்தை பார்க்க நேர்ந்தது
உள்ளங்கை நெல்லிக்கனி போல் படக்கலையின் விட களஞ்சியம் (விஷ களஞ்சியம்)  வெளிப்படையாயிற்று.
படமுயற்சியை  கலை என்று பேச்சு வழக்கில் சொன்னோமேயன்றி இன்று தமிழுலகில் காணப்படும்  படத்திறமை கலையின் பால் படாதென்றே கூறவேண்டும் .. என்னே?
காதல் ..  கள்ளக்காதல் அதற்கேற்ற பாடல் . இதற்காக பல்யுத்தம் புகைவண்டி விசைவண்டி  விபத்து. கடல் அல்லது ஏரியிற் கண்டம்  ஆபாசமான செயகைகளுக்கு நிலையங்களாக  கோயில்கள் இவையெல்லாம் சேர்ந்து படமாகிறது...


 

கருத்துகள் இல்லை: