வீரகேசரி : இலங்கை பதில் ஜனாதிபதியாக பொறுப்பெடுத்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு” ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தன்னுடைய அலுவலகம் மற்றும் மற்ற அரசு கட்டடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
“அரசியலமைப்பு சட்டத்தைக் கிழித்து எறிய முடியாது. சட்டத்தை பாசிசவாதிகள் கையிலெடுப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் சமீபத்திய இந்த அறிவிப்பு, இலங்கை தலைநகரில் ராணுவம் பாதுகாப்பை நிலைநிறுத்த உள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கொழும்புவில் உள்ள பிபிசி நிருபர் கூறுகிறார்.
புதன், 13 ஜூலை, 2022
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் பிரகடனம்! நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராணுவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக