திங்கள், 11 ஜூலை, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு மாதங்களில் என்ன சாதித்தார்?

May be an image of 8 people and text that says 'SHH CNNNEW NEWS BREAKING NEWS நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள லிட்ரோ லிட் கேஸ், 100,000MT LP எரிவாயுவை வெற்றிகரமாக கொள்முதல் செய்துள்ளது. மொத்த பெறுமதியாக $90 மில்லியன் செலவாகும். உலக வங்கி 70 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது, மீதமுள்ள $20 மில்லியன் லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை நான்கு மாதங்களுக்கு நாட்டிற்கு வழங்க போதுமானதாக இருக்கும். 70% தொகை உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் 5 மில்லியன் 12.5 கிலோ சிலிண்டர்கள், மில்லியன் 5 கிலோ சிலிண்டர்கள் மற்றும் மில்லியன் 2.5 கிலோ சிலிண்டர்கள் பெறப்படும். மீதமுள்ள 30% வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படும். லிட்ரோவினால் 20 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 33,000 தொன் எல்பிஜி ஆரம்ப தொகை ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.'

Mr Clean - மிஸ்டர் க்ளீன் :  ரணில் பிரதமராகி இரண்டு மாதமும் நிறைவாக இல்லை.
* சொன்னது போல சமையல் வாயுக்களை பெற்று தந்துள்ளார்.
நாளை முதல் விநியோகம்.
* யூரியா உரத்தை பெற்றுத்தருவதாக சொல்லி இருந்தார்.
அதுவும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
* 05 பில்லியன் பணத்தோடேயே பொறுப்பெடுத்தார் , இன்று 19 பில்லியன் பணம் சேர்க்கப்பட்டுள்ளது.
* IMF மூலம் உதவி பெற முடியாதிருந்தனர்.
அதற்கான பணிகளையும் ரணில் பூர்த்தி செய்யும் தருவாய்க்கு கொண்டு வந்தார்.
சர்வதேச நிபுணர்கள் இங்கு தங்கியுள்ளனர்.
* இம்மாத நடுப்பகுதியிலே இடைக்கால வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றிலே சமர்ப்பிக்கவிருந்தார்.
அதிலே மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களே முக்கியத்துவம் பெற இருந்தது.


* எரிப்பொருள் வரிசையினையும் குறைக்க முயற்சிப்பதாக சொல்லி வந்தார்.
இதுவெல்லாம் இரண்டு மாதத்திற்கு உள்ளே நடந்தவைகள்.
அவர் அவகாசம் கேட்டதோ ஆறு மாதம்.
இதற்குள் அவர் தேவையில்லை என அனுரவின் JVP , சஜித்தின் SJB என்பன சொல்கிறார்கள் என்றால் , அவர்களால் ரணிலை விட சிறப்பாக செய்யலாம் என்று தானே அர்த்தம்.
அப்படியானால் ஆரம்பத்திலேயே இந்த கோழைகள் பிரதமர் பதவியை எடுத்திருக்கலாமே.
சரி ரணிலை விலக்கிட்டு இப்போதாவது எடுத்து செய்யட்டுமே.
ரணில் பொறுப்பெடுத்தது அங்கவீனமான ஒரு நாட்டினை என்பதை மனசாட்சியோடு மறவாதிருப்போம்.

கருத்துகள் இல்லை: