புதன், 13 ஜூலை, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிபராக தெரிவு செய்யப்படுகிறார்.. பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம்

Ranil Wickremesinghe: Sri Lanka Leader Names Opponent as PM in Push for  Unity - Bloomberg

கண்டி நியூஸ் : இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக கோட்டாபய ராஜபக்ச, இன்று (13ம் திகதி) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
 இதன்படி, பதில் அதிபராக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (13) பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 புதிய  அதிபரை   தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
 அதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் அன்றைய தினம் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.


 இந்த நிலையில், இலங்கை   வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஜனாதிபதியாகவும் பதவிக்காலம் முடிவதற்குள் இராஜினாமா செய்த முதலாவதும் அதிபராகவும்   கோட்டாபய ராஜபக்ச வரலாற்றில் இடம்பிடிப்பார்.
அதிபர் கோத்தபாய  இன்று பதவி விலகுவார் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 9ஆம் திகதி மாலை தெரிவித்தார்.
 நவம்பர் 16, 2019 அன்று நடைபெற்ற அதிபர்  தேர்தலில், திரு.கோட்டாபய ராஜபக்ஷ 6,924,225 மற்றும் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரானார்
 நவம்பர் 18, 2019 அன்று அனுராதபுரம் ருவன்வெலி மஹாசாயா வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் 7வது நிறைவேற்று அதிபராக  கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றார்.
 .(kandytimenews.com)

கருத்துகள் இல்லை: