வெள்ளி, 15 ஜூலை, 2022

சுப்பிரமணியன் சாமி : ராஜபக்சேக்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவது இந்தியாவிற்கு நல்லதல்ல

 Mathivanan Maran -    e Oneindia Tamil News :  டெல்லி: இலங்கையைவிட்டு ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது அல்ல; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இலங்கையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, பதவியை விட்டு ஓடிய மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் சுப்பிரமணியன் சுவாமி. இலங்கையில் ராஜபக்சேக்களை அந்நாட்டு சிங்கள மக்களே ஓட ஓட விரட்டுவது கண்டு ரத்தக் கண்ணீர் வடிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜபக்சேக்களைப் பாதுகாக்க இந்திய ராணுவத்தையே பிரதமர் மோடி அனுப்ப வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தவர்


ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை தொடர்பாக கூறியதாவது: இலங்கையில் நடக்கும் போராட்டங்களுக்கு ஜேவிபி என்ற கட்சிக்கு தொடர்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வன்முறை இயக்கமாக இருந்தது ஜேவிபி. மக்கள் புரட்சி மூலம் இலங்கையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறது ஜேவிபி.

இலங்கை ராஜபக்சே சகோதரர்கள் அந்நாட்டு மக்களால், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ராஜபக்சே சகோதரர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை. இலங்கை மக்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டவர்கள்தான் ராஜபக்சே சகோதரர்கள். அவர்களுக்கு எதிராக ஒரு குழுதான் போராட்டம் நடத்துகிறது. ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என கடும் நெருக்கடி தரப்பட்டது.

ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையைவிட்டு வெளியேறியது இந்தியாவுக்கு நல்லது அல்ல. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தானது. இலங்கை என்பது இந்தியாவின் எல்லையில் இருக்கும் நாடு. இலங்கையில் இந்திய எதிர்ப்பாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். சீனா, பாகிஸ்தானும் இலங்கையில் காலூன்றி நிற்கிறது. ஆகையால் இலங்கை விவகாரங்களை மிக சாதாரணமாக நமது நாடு எடுத்துக் கொள்ளவும் கூடாது.

நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் - கொந்தளிக்கும் குடிமக்கள் நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் - கொந்தளிக்கும் குடிமக்கள்

இலங்கையில் நடைபெறும் பிரச்சனைகள் நாட்டின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். அண்டை நாடு என்ற போதும் நாம் உடனே ராணுவத்தை அனுப்பிவிட முடியாது. ஒருவேளை ராஜபக்சே சகோதரர்கள், ராணுவ உதவியைக் கேட்டிருந்தால் நமது ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். அமைதியை இலங்கையில் நிலைநாட்ட இந்திய ராணுவம் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: