வெள்ளி, 20 மே, 2022

மாநில உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்புகள்” : PTR பேட்டி! GST கவுன்சிலின் அடிப்படையே பிழையாக உள்ளது..

கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் :: ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மற்றும் பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும் ஒன்றாக பொறுத்தி பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்புமுறை கூட்டாட்சி நடைமுறையை பாதிப்பதாகஉள்ளதாகவும், மாநிலங்களை ஜி.எஸ்.டி. குழுவின் பரிந்துரை கட்டுப்படுத்தாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை முன்வைத்தது.
அரசியலமைப்பு சட்டம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிவிதிப்பி சம உரிமை வழங்கியுள்ளதாகவும், ஆனால், ஜி.எஸ்.டி. அதன் அடிப்படையில் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை மாநில அரசின் சட்டங்களை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை கூட்டாட்சி நடைமுறையை பாதிப்பதாக உள்ளதாகவும், கூட்டாட்சி தத்துவ நாடான இந்தியாவி ஜி.எஸ்.டி. குழுவின் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “வரி விதிப்பு தொடர்பாக மிகவும் முக்கியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
“GST கவுன்சிலின் அடிப்படையே பிழையாக உள்ளது.. மாநில உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்புகள்” : PTR பேட்டி!

ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை மாநில அரசின் சட்டங்களை கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில - ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு மட்டுமே அனுப்ப முடியும். கட்டுப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல், பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும் இதோடு பொறுத்தி பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பல ஆண்டுகளாக மாநில உரிமைகளில் தலையீட்டு, அதன் உரிமைகளை குறைக்கும் வகையில்தான் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆகியோரின் செயல்பாடுகள் இருந்தன்.

இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகளின் மூலம், மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்ந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் ஜி.எஸ்.டி தொடர்பான தீர்ப்பில், சட்ட அமைப்பில் உள்ளவற்றையே அவை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மாநில உரிமைகளை காக்கும் வகையில் நீதிமன்றங்களின் தீர்ப்பு வந்துக்கொண்டிருக்கிறது. அவை ஜனநாயகத்துக்கும், மக்களுக்கு வழங்கப்பட்டும் உரிமைகளை நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளைச் சட்டமாக இயற்றமால், அவற்றை அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாட்டிலேயே பிழை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: