ஞாயிறு, 15 மே, 2022

திமுக ராஜ்யசபாவுக்கு தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் கே. ஆர். என். ராஜேஷ்குமார், வடசென்னை கிரிராஜன் .. ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது

திமுக ராஜ்யசபா பட்டியல்: தேர்வு, அவசர வெளியீடு பின்னணி!
மின்னம்பலம் திமுக ராஜ்யசபா பட்டியல்: தேர்வு, அவசர வெளியீடு பின்னணி!
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எனப்படும் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்ய வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
மாநிலங்களவையில் தமிழகம் சார்பில் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

6 இடங்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 4 எம்பிக்கள் தெரிவு செய்வதற்கு போதுமான சட்டமன்ற பலத்தை பெற்றுள்ளது. அதிமுக சார்பில் 2 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான பலத்தை அக்கட்சி பெற்றுள்ளது.

இந்த நிலையில் திமுகவின் சார்பில் 3 வேட்பாளர்களின் பெயர் இன்று (மே 15 )அக்கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திமுகவின் வேட்பாளர்களாக தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் கே. ஆர். என். ராஜேஷ்குமார், வடசென்னை கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தஞ்சை கல்யாணசுந்தரம்

தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளராக இருக்கிறார் கல்யாணசுந்தரம். கட்சியில் சீனியரான இவர் சோழமண்டல தளபதி என திமுகவில் வர்ணிக்கப்பட்ட கோசி மணியின் வலதுகரமாக இருந்தவர்.

கும்பகோணத்துக்கு அருகே உள்ள பம்ப படையூர் என்னும் கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் இதுவரை பெரிய சர்ச்சைகளில் சிக்காதவர். கும்பகோணம் வட்டார கிராமங்களில் புருஷன் பொண்டாட்டி பிரச்சனையை கூட பேசி முடித்து தீர்வை ஏற்படுத்தி தருபவர் என்று இவரைப் பற்றி மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியை கேட்டிருந்தார் கல்யாணசுந்தரம். ஆனால் அந்த தொகுதி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் கல்யாண சுந்தரத்திற்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக கல்யாணசுந்தரத்தை தெரிவு செய்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

வேட்பாளர் பட்டியல் வெளியானதும் இவர் கள்ளர் என்றும் இல்லை இல்லை வன்னியர் என்றும் தஞ்சை மாவட்டத்தில் விவாதம் எழுந்தது.

இது குறித்து கும்பகோணத்தில் விசாரித்தபோது,

"கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். கள்ள சமுதாயத்தில் தொண்டைமான், மண்கொண்டார் போன்ற பட்டப் பெயர்களை போல வன்னியர் என்ற பட்டப்பெயரும் உண்டு. கல்யாணசுந்தரம் வன்னியர் என்ற பட்டப் பெயர் கொண்டவர். அதனால் தான் இவர் வன்னியர் என்ற குழப்பமும் சிலரிடம் உண்டு. ஆனால் வன்னியர் என்ற பட்ட பெயரை கொண்ட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் கல்யாணசுந்தரம்" என்கிறார்கள்.

வடசென்னை கிரிராஜன்

திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான கிரிராஜன் நீண்ட காலமாக வட சென்னை மக்களவைத் தொகுதியையும் வடசென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற வாய்ப்புக்கும் முயற்சி செய்தவர். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் கிரிராஜன்.

கலைஞர் இருந்த போதும், அதற்கு பிறகு ஸ்டாலின் தலைவராக வந்த பிறகும் சென்னையில் திமுக நிகழ்ச்சிகளுக்கு பெருந்திரளான வழக்கறிஞர்களுடன் அணிவகுப்பவர் கிரிராஜன். மேலும் கட்சியினருக்கான சட்ட உதவிகளையும் சளைக்காமல் செய்பவர். திமுக சட்டத் துறை பிரமுகர்கள் தொடர்ந்து ராஜ்ய சபாவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரிசையில் கிரிராஜனும் ராஜ்ய சபாவிற்கு செல்கிறார்.

நாமக்கல் ராஜேஷ்குமார்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரான ராஜேஷ்குமார் கடந்த முறை ஒன்றரை வருட ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் உதயநிதி பெயரை சொல்லி கட்சியினரின் வரவேற்புக்கும் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானவர். இப்போது அவருக்கு முழுமையான ஆறாண்டு கால ராஜ்யசபா வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திடீர் வெளியீடு ஏன்?

ராஜ்யசபா தேர்தல் ஜூன் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில்... வரும் 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற நிலையில்... இவ்வளவு சீக்கிரம் ஸ்டாலின் ஏன் திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் என்ற கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, "ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிக்குள் கடுமையான போட்டி இருக்கிறது. பலர் தங்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் வேண்டி ஸ்டாலினிடம் அழுத்தம் கொடுத்து வந்தனர். சிலர் இன்னும் நாட்கள் இருக்கிறதே என்ற கணக்கில் முயற்சி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பட்டியல் மிகவும் முன்கூட்டியே வெளியாகிவிட்டது.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. திமுகவின் 4 ராஜ்யசபா உறுப்பினர்களில் ஒன்று ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் பேசப்பட்டது போல அக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபா வாய்ப்பு கேட்டு ஸ்டாலினை சந்திக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒன்று கொடுக்கப்பட்டு விட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தால் அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்க நேரிடும்.

வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை தாமதப்படுத்தினால் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் என்பதால்தான் கால அவகாசம் நிறைய இருக்கும் போதிலும் மிகவும் முன்கூட்டியே ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்'"என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

ஆரா

கருத்துகள் இல்லை: