செவ்வாய், 17 மே, 2022

சாதி சான்று இல்லாததால் தேர்வுக்கு தடை.. 10ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

Govindaraji Rj | Samayam Tamil  : கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் இல்லாததால் மாணவி ஒருவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தம்பதியினர் தனது மகள் மற்றும் மகனுடன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.


இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 4 பேரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக், மங்கம்மாள் தம்பதியினர் எங்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் தமிழ்விழி மற்றும் கல்லூரி படிக்கும் முத்தமிழ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.தற்போது 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் மகளிடம் சாதி சான்றிதழ் கேட்கின்றனர்.இல்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என தெரிவிக்கின்றனர்.
அரசுப்பேருந்தை துரத்திய யானை; தப்பிய பயணிகள்!

பன்னியாண்டி சமுதாயத்தை நாங்கள் 10 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வந்தும் யாரும் சான்றிதழ் வழங்காததால் குடும்பத்துடன் தீ குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தோம் என தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வரும் தமிழகத்தில் சாதி சான்றிதழ் இல்லை என்பதற்காக மாணவி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கருத்துகள் இல்லை: