ஞாயிறு, 15 மே, 2022

பங்குச்சந்தை “4 நாளில் ரூ.24 லட்சம் கோடி மாயம்..? : மோடி ஆட்சியில் பின்னடைவில் இந்திய பங்குச் சந்தைகள்!

 கலைஞர் செய்திகள் : பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக சுமார் 24 லட்சம் கோடி காணாமல் போகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பு, இந்திய பங்குச்சந்தையிலும் பெரிதாக எதிரொலித்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, ஓரிடத்தில் நின்றபாடில்லை.
இதனிடையே ரஷ்ய - உக்ரைன் போரின் காரணத்தால் கடந்த சில மாதங்களாகவே பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாயின. ஏப்ரல் மாத தொடக்கத்தில் பங்குச் சந்தையின் தாக்கம் சற்றுத் தணிந்த நிலையில், மீண்டும் பங்குச் சந்தைகள் சரிய ஆரம்பித்தன.


பி.எஸ்.இ சென்செக்ஸ் குறியீடு கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 57,975 புள்ளிகளைத் தொட்டது. பின்னர் நேற்று 13 ஆம் தேதி சுமார் 5,182 புள்ளிகள் குறைந்து 52,793 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

வெறும் 2 வாரத்தில் மட்டும் சுமார் 8.9% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவின் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 265.88 லட்சம் கோடியிலிருந்து, 241.34 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 24 லட்சம் கோடி காணாமல் போகியுள்ளது.

காணாமல் போனது என்றால் நஷ்டமா?

பங்குச்சந்தையில் சரிவினால், 24 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதா என்றால், இல்லை. சந்தை உச்சத்திலுருந்து பங்குகளை வாங்கி, அதன் பின்பு சரிவின் போது விற்று இருந்தால் மட்டும் தான் நஷ்டம் என்று கூற முடியும். இது நஷ்டக் கணக்கு அல்ல, ஆனால் காணமல் போனது தான் உண்மை எனக் கூறப்படுகிறது.

இந்த பெரிய சரிவிற்கான காரணம் என்ன?

கடந்த மே 24 காலக்கட்டத்தின் போது இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 8.33 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 6.95 % ஆக இருந்தது. தற்போது ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பணவீக்கம் நல்லது என்றாலும் கூட, அது அதிக அளவிற்கு செல்லும் போது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகும்.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 77.50 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதன் காரணத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, இறக்குமதிகளை இது நேரடியாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

BSE Consumer Durables, BSE Realty, BSE Power ஆகியவை கடந்த 2 வாரத்தில் சுமார் 14 % வீழ்ச்சியடைந்துள்ளது. BSE Metal மார்க்கெட் சுமார் 17% சதவீதமும், BSE FMCG 4.9%, BSE Technology 6.5% என வீழ்ச்சி கண்டுள்ளன. இப்படி எல்லாத் துறை சார் குறியீடுகளும் பலத்த சரிவில் உள்ளாதால், சென்செக்ஸ் ஏற்றம் காண முடியாத நிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை: