ஞாயிறு, 15 மே, 2022

இன்றைய பிரதமர் ரணிலும் புலிகள் காலத்து (2002 – 2005) பிரதமர் ரணிலும்! வரலாறு முக்கியம் அமைச்சரே!

Nadarajah Kuruparan 
:  காலையில் எதிர்வு கூறினேன் - மாலையில் பலித்தது- ரணிலின் ”கோட்டா கோ கம கால அணுகுமுறை” வெளியானது! (Comment பகுதியில் பார்க்கவும்)
ரணிலின் இடைக்கால அணுகுமுறை வெற்றி அளித்தால் -  “கோட்டா கோ கம” – “நோ டீல் கம”வின் நிலை என்னவாகும்?  
 ரணில் விக்கிரமசிங்கவின் *முக்காலத்து* அரசியல் அணுகு முறையை புரிந்து கொள்தன் ஊடாகவே இதற்கான பதிலை கண்டறிய முடியும்!
*புலிகள் காலத்து (2002 – 2005) பிரதமர் ரணில் விக்கிரசிங்க!*
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில்  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கையாண்ட அரசியல் தந்திரம் தற்போதைய சூழலில் உற்று நோக்க வேண்டியது.
*புலிகளின் கடடுப்பாட்டு பகுதிகளுக்கு ஆயுதம் வெடி மருந்துகள் உள்ளிட்ட யுத்த தளபாடங்களை தவிர அனைத்தையும் தங்கு தடையின்றி அனுப்புமாறு அரச நிர்வாகத்திற்கும்,  அதனை தடுக்க வேண்டாம் என பாதுகாப்பு தரப்பிற்கும் உத்தரவிட்டார்.
அதனால் சமாதான காலத்தில் கொழும்பில் புழக்கத்தில் இருந்த அனைத்து விதமான ஆடம்பர, சொகுசு பொருட்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தாராளமாக புழக்கத்தில் இருந்தன.
* சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட புலிகள் தரப்பு பிரதிநிதிகளுக்கு அரசாங்க பிரதிநிதிகளுக்கு ஈடாக 5 நட்சத்திர விடுதிகளும், போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
* புலிகளின் சமாதான பேச்சுவார்த்தை குழுவினர்க்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்பட்டன.
* 2004 டிசம்பர் சுனாமியின் போது சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், உள்நாட்டு நிறுவனங்களையும் தங்கு தடையின்றி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்ல அனுமதித்ததுடன், புலிகளின்  சுனாமி  மீட்பு பணி அணிக்கு (Tuscany task force) ஆயிரக்கணக்கான மடிக்கணிணிகள் இலத்திரணியல் உபகரணங்கள்  செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(2004 ஏப்ரலில் இவரது பதவி பறிபொயிருந்தாலும், இவர் வித்திட்ட புலிகளுடனான பேச்சுலார்த்தை 2005 மகிந்தவின் ஆட்சிவரை தொடர்ந்தது.)
* உள்நாட்டில் புலிகளின் முக்கியஸ்த்தர்களின்  சுதந்திர நடமாட்டத்திற்கு ஊறுவிளைக்க வேண்டாம் என படையினருக்கு பணிக்கப்பட்ட அதே வேளை மறைமுக புலனாய்வு கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு படையினரை  பணித்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சவாத்தைக் கால  அணுகுமுறை புலிகளின் போராட்ட வீரியத்திலும், கட்டுக்கோப்பிலும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது வரலாறு.
*நல்லாட்சிகாலத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!*
* மாவீரர் தின நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்காது ஒருவித மறைமக கட்டப்பாடுகளுடன் அதனை அனுமதித்திருந்தார்.
* சமூகவலைத்தளப் பதிவுகளில்  தமிழீழம் காண்பதில் இருந்து, மேதகுவையும் – அவர்தலைமையிலான தளபதிகளையும் புகழ்வதுரை, தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்தை சமூகவலைத்தளங்களில் நடத்துவதற்கும் அனுமதித்திருந்தார்.
* முள்ளிவாய்க்கால் கஞ்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கும் அனுமதித்தார்.
* ஜனநாயகபூர்வமான போராட்டங்கள், பேரணிகளை தடுக்கவோ இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாமென படையினரை கேட்டுக்கொண்டார்.
* புலம்பெயர் அமைப்புகள், செயற்பாட்டாளர்களை இலங்கைக்குள் அனுமதித்ததோடு முதலீடுகளையும் கண்டுகொள்ளாது விட்டார்.
இந்த அணுமுறையினால் 2015 – 2019 காலப்பகுதியில் தமிழ்த்தேசிய அலையும், தமிழீழக் கோரிக்கையும், வீறுகொண்ட எழுச்சியும் எப்படி அமிழந்து கிடந்ததும் வரலாறு.
* கோட்டா கோ கம - நோ டீல் கோகம கால இன்றைய இலங்கையின் இடைக்காலப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!*
* கோட்டா கோ கம போராட்டத்தை குழப்பினால் பிரதமராக பொறுப்பேற்க போவதில்லை என்ற நிபந்தனையை விதித்தார்.*
இதன் மூலம்
* ஜனாதிபதிக்கு ஒரு செக் வைத்தார்.
* மறுபுறம் நீங்கள் போராடும் வரை, அல்லது சோர்ந்து போகும் வரை, அல்லது நீங்களாக எழுந்து செல்லும் வரை  போராடலாம் என்ற செய்தியை போராட்டக் காரர்களுக்கு சொல்லி இருக்கிறார்.
• கோட்டா கோ கமவின் மீது சிறு கீறலும் விழமாட்டாது என உறுதியளித்துள்ளார்.
• கோட்டா கோ கம பக்கம் பொலிஸார் தலைவைத்துப் படுக்கவும் மாட்டார்கள் எனக் கூறியு்ளார்.
• மக்களின் இளைஞர்களின் எந்தப் போராட்டமும் நசுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
• 3 நேர உணவு உண்பதற்கான நாட்டை உருவாக்கப் போவதாக சபதம் எடுத்துள்ளார்.
• எரிபொருள், மின்சாரம், மருந்துப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட,  டொலர் பிரச்சனைகளுக்கும் விரைவான திர்வைக்கான குழுக்களை அமைத்துள்ளார்.
• இளைஞர்களுக்கான சிறந்த எதிர்காலம் உருவாக்க உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
• போராட்டக்காரர்களுடன் சுமூகமான உறவும் பேச்சவார்த்தையும் சந்திப்பும் தொர்வதை உறுதிசெய்துள்ளார்.
• சர்வதேசத்துடனான நெருக்கமான உறவை உறுதி செய்து உதவி வழங்கும் நிறுவனங்களின் நிபந்தனைகள், கோரிக்கைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்வதில் ஈடுபட்டுள்ளார்.
• இடைகால அல்லது தேசிய  அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அணுகுமுறை – ராஜபக்ஸக்களுடன் பேச மறுத்த போராட்டக் காரர்களை, ராஜபக்ஸக்களால் நியமிக்கப்பட்ட ரணிலுடன் பேச வைத்திருப்பதுடன் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளதும் இன்றைய வரலாகிறது.
அப்போ “கோட்டா கோ கம” காலத்தின் பிரமர் ரணிலின் இடைக்கால அணுகுமுறை வெற்றி அளித்தால் -  கோட்டா கோ கம - நோ டீல் கோகமவின் நிலை என்னவாகும்?  
உண்மையில் எனக்கு தெரியாது – தயவு செய்து என்னிடம் கேளாதிர்கள்….
ரணிலின் அரசியலையும், அவரது அணுகுமுறையையும் விளங்குவதன் அடிப்படையில்  “கோட்டா கோ கம” “நோ டீல் கம” போராட்டக்காரர்களே இதற்கு பதிலை தேட வேண்டும். தேடுவார்களா?

கருத்துகள் இல்லை: