புதன், 3 நவம்பர், 2021

இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி முகம் இம்மாச்சல் பிரதேசத்தில் கோட்டைவிட்ட பாஜக.. தட்டி தூக்கிய காங்கிரஸ்

 Vigneshkumar -   Oneindia Tamil :  டெல்லி: பாஜக ஆளும்கட்சியாக இம்மாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டசபை மற்றும் ஒரு மக்களவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
அங்கு அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 மக்களவை தொகுதிகளுக்குக் கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றன.
கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல்கள் அனைத்தும் நடத்தப்பட்டன.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


இதில் அசாம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது.
அதேநேரம் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவால் வெல்ல முடியவில்லை.
குறிப்பாக பாஜக ஆளும்கட்சியாக இம்மாச்சல் பிரதேசத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.
அதில் மூன்று தொகுதிகளிலும் பாஜக படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.

காங்கிரஸ் மாபெரும் வெற்றி வாகை சூடியுள்ளது. இம்மாச்சல் பிரதேசம் இம்மாச்சல் பிரதேசம் கடந்த சில ஆண்டுகளாகவே வடகிழக்கு மாநிலங்களை பாஜக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. இதனால் இந்தத் தோல்வி பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 2019 மக்களவை தேர்தலில் பாஜக வென்றிருந்த மண்டி (Mandi) தொகுதியையும் காங்கிரஸ் கட்சியின் வசம் சென்றுள்ளது.

காங்கிரஸ் காங்கிரஸ் இமாசல பிரதேசத்தில் ஃபதேபூர் மற்றும் ஆர்க்கி பகுதிகளில் காங்கிரஸ் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேநேரம் பாஜக வலுவாக உள்ள ஆப்பிள் ஹார்ட்லேண்ட் ( apple heartland) என்று அழைக்கப்படும் ஜுப்பல்-கோட்காய் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த நரிந்தர் சிங் பிரக்தா உயிரிழந்ததைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அவரது மகன் சேத்தன் சிங் பிரக்தாவுக்கே சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

என்ன காரணம் இருப்பினும், கடைசி நேரத்தில் அவருக்குச் சீட்டு வழங்க பாஜக மறுத்ததே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. பாஜகவின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த நரிந்தர் சிங் பிரக்தாவின் மகன் சேத்தன் சிங் பிரக்தா இந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கினார். இவர் பாஜக வாக்குகளைப் பிரித்ததும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதமாக அமைந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரோஹித் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே 2 முறை இதே தொகுதியில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலிலும் கூட வெறும் 1,060 வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் தோல்வி அடைந்திருந்தார்.
பாஜக வேட்பாளர் டெபசிட் இழந்தார். மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றையும் விட மண்டி மக்களவை தேர்தல் முடிவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில் மறைந்த முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் கார்கில் போர் வீராங்கனை பிரிகேடியர் குஷால் தாக்கூர் போட்டியிட்டார்
. இதில் சுமார் 8700 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். முதல்வரின் அரசியல் எதிர்காலம் முதல்வரின் அரசியல் எதிர்காலம் மண்டி தொகுதி ஹிமாச்ச பிரதேச பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்த மாவட்டத்தில் வருகிறது.
இந்தத் தோல்வி ஜெய்ராம் தாக்கூரின் அரசியஸ் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கலாம். ஏனென்றால் முதல்வரே தனிப்பட்ட முறையில் இங்குத் தீவிர பரப்புரை செய்தார். அப்படியிருந்தும் பாஜக இங்குத் தோற்றுள்ளது. அதேநேரம் ஜெய்ராம் தாக்கூர் முக்கிய தலைவர் என்பதால் அவரை உடனடியாக பாஜக தலைமை மாற்றாது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்

கருத்துகள் இல்லை: