வியாழன், 4 நவம்பர், 2021

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்குகள் பதிவு!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தினை தமிழக அரசு அறிவித்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேபோல் உச்ச நீதிமன்றமும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிப்பது தொடர்பான வழக்கில், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க, வாங்க, வெடிக்கத் தடை விதித்திருந்தது. சரவெடி உள்ளிட்ட வெடிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் போலீசாரே பொறுப்பேற்க வேண்டும். 

இந்த உத்தரவுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்யவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், கீழ்பாக்கம், அயனாவரம், டி.பி.சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை: