செவ்வாய், 2 நவம்பர், 2021

இலங்கைக்கு பார்ப்பனீயத்தை இறக்குமதி செய்த ஊடகங்கள்! ஹரிஜன் என்ற கபட சொல்லை...

 செல்லபுரம் வள்ளியம்மை  இலங்கையில் ஹரிஜன் என்ற சொல் எந்த காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.
இந்த சொல்லே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை .
இந்நிலையில்  தமிழக பார்ப்பனர்கள் எப்படி ஒவ்வொரு பார்ப்பனீய கருத்துக்களாக அங்கு விதைத்தார்கள் என்பதை இந்த 1956 ஆம் ஆண்டு இலங்கை வீரகேசரி பத்திரிகை காட்டுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ ஜாதி இல்லை . நடைமுறையில் ஜாதி பாகுபாடு மட்டுமல்ல குற்றங்களும் இருந்தன தற்போதும் ஓரளவு இருக்கின்றன..
ஆனால் அந்த ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு ஒரு சமூக அங்கீகாரம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செய்தியும் தலைப்பும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்றெண்ணுகிறேன்.
கோயில்கள் எல்லா ஜாதியினரும் வழிபடுவதற்காக திறந்து விடப்பட்டன என்றுதான் பிற்கால பத்திரிக்கை செய்திகள் கூறின.
ஆனால் இந்த வீரகேசரி பத்திரிகையோ ஹரிஜனங்கள் என்ற காந்தியின் கபட வார்த்தையை இறக்குமதி செய்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் என்ற சொல் மூலம் காந்தி ஏமாற்றினர் என்பது வரலாறு . ஜாதியே அடியோடு ஒழியவேண்டும் என்று பெரியாரும் அம்பேத்காரும் போராடிக்கொண்டு இருந்த காலக்கட்டத்தில் அதற்கு எதிராக நின்று கொண்டு அந்த மக்களை ஏமாற்ற காந்தி கண்டுபிடித்த கயமை சொல்தான் இந்த ஹரிஜன் என்ற சொல்.
அதே பணியில் இதை இலங்கையில் அரங்கேற்றியவர்கள் பார்ப்பன பத்திரிகை ஆசிரியர்கள்.
இவர்களை பற்றிய விபரங்களை நாம் வரலாற்றில் பதிவு செய்யவேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவையாறு திரு..கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யங்கார் எனப்படும் கே. பி. ஹரன் என்பவர்தான் அப்போது வீரகேசரி பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.
மேலாண்மை இயக்குனராக இருந்தவர் ஈஸ்வர அய்யர் . நிர்வாகியாக இருந்தவர் சங்கரநாராயணன் என்கின்ற மூன்றாவது பார்ப்பனர்.
இதன் உரிமையாளர் தமிழ்நாடு ஆவணிப்பட்டியை சேர்ந்த பெரி. சுப்பிரமணியம் செட்டியார்.என்பவராகும்
1959 இற்கு பின்பு இதன் ஆசிரியராக இருந்து பார்ப்பன சேவையை அங்கு செய்தவர் இந்து பத்திரிகையின் சமந்தியான   .கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் என்பவராகும் .
அசல் ஆர் எஸ் எஸ் இந்துத்வா அடிப்படை வாதம் தற்போது இலங்கையில் மேலோங்கி இருப்பதற்கு இந்த புண்ணியவான்கள் அளப்பெரும் சேவை ஆற்றி உள்ளார்கள்..
இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே . இது பற்றி விரிவான ஆய்வு கட்டுரையே எழுதவேண்டும் .

கண்ணன் இரா
:  சிஙகளவர்களில் இந்தச் சாதிப் பாகுபாடு உண்டா புத்தக் கோவிலுக்குள் நுழையத் தடையுண்டா?

Durai Ilamurugan :  பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும் தங்கள் சாதி புத்தியை எடுத்துக் கொண்டே செல்வார்கள்

Radha Manohar  :  சிங்களவர்களும் திராவிடர்களே . சம்பந்தன் கூன் பாண்டியன் வகையறாக்களால் கழுவேற்றம் சிரச்சேதங்கள் எல்லாம் அரங்கேற்றிய காலக்கட்டத்தில் தப்பி ஓடிய திராவிட சமண பௌத்தர்கள் இலங்கையில் சென்று குடியேறினார்கள்
அவர்களிடம் ஒட்டிக்கொண்ட ஜாதி அடையாளமும் கூடவே கொஞ்சம் இருந்தாலும் அவர்களின் பௌத்த கோட்பாட்டில் ஜாதி இல்லை
ஜாதிக்கு எதிரான ஒரு புரட்சிகர கோட்பாடுதான் பௌத்தம்
அவர்களின் பௌத்த கருவூலங்களை காப்பாற்றவே அவர்கள் சிங்கள மொழியை உருவாக்கினார்கள்
இந்திய பெரு நிலப்பரப்பில் வழித்து துடைத்து எறியப்பட்டது பௌத்தம்.
எந்த இந்திய மொழியும் தமக்கு பாதுகாப்பானதல்ல என்று உணர்ந்தார்கள்
எனவே ஆரிய பார்ப்பனியத்திற்கு தெரியாத ஒரு மொழி தேவைப்பட்டது
அதுதான் சிங்கள மொழி .. அது பௌத்தத்தை காத்த மொழி
புத்த வாழ்வியலை அழிவில் இருந்து காத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சிதையாமல் தாய்வீட்டு சீராக வழங்கிய மொழி!

கருத்துகள் இல்லை: