வெள்ளி, 8 அக்டோபர், 2021

சென்னை ஃபோர்டு FORD தொழிற்சாலையை கைப்பற்றும் டாடா.. தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு வெற்றி.

டாடா ப்ராஜெக்ட்ஸ்
ஃபோர்டு - டாடா

Prasanna Venkatesh -  GoodReturns Tamil:   அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்து ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையைப் புரட்டிப்போட்டது.
இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலைவாய்ப்பை முழுமையாக இழக்கவும், சப்ளை நிறுவனங்கள் மொத்தமாகப் பாதிக்கப்படும் நிலையும் உருவானது.
Ford  ஃபோர்டு நிறுவனத்திற்குச் சென்னை மறைமலைநகர் மற்றும் குஜராத் சனந்த் பகுதிகளில் இரு தொழிற்சாலைகள் உள்ளது.
சென்னையில் இருக்கும் தொழிற்சாலையை காப்பாற்றும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு களத்தில் இறங்கியது.
தமிழ்நாடு அரசின் முயற்சி கிட்டதட்ட வெற்றி அடைந்துவிட்டது.
சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை ஃபோர்டு தொழிற்சாலை சென்னை ஃபோர்டு தொழிற்சாலை சென்னை மறைமலைநகரில் இருக்கும் ஃபோர்டு தொழிற்சாலையின் உற்பத்தி நிறுத்தப்படும் முன்பு இதற்குத் தீர்வு காண வேண்டும் எனத் தமிழக அரசு முயற்சி செய்து வந்த நிலையில் பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இத்தொழிற்சாலையைக் கைப்பற்ற முன்வந்துள்ளது.

இன்று காலை வெளியான தகவல் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் சென்னையில் இருக்கும் ஃபோர்டு தொழிற்சாலையைக் கைப்பற்றித் தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு வாயிலாகவே இன்று காலை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் சுமார் 9 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கு விலை 355 ரூபாயில் இருந்து 365 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் சந்தை மதிப்பீட்டின் படி 2வது இடத்தையும் இன்றைய வர்த்தக உயர்வின் மூலம் அடைந்துள்ளது.

கடந்த மாதம் தமிழ்நாடு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் திரு.அன்பரசன் ஃபோர்டு ஊழியர்கள், ஃபோர்டு தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களைச் சப்ளை செய்து வந்த பல்வேறு நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க உள்ளது என நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 ஃபோர்டு இந்தியா நிர்வாகத் தலைவர் ஃபோர்டு இந்தியா நிர்வாகத் தலைவர் சில நாட்களுக்கு முன்பு ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா டாடா மோட்டர்ஸ் வர்த்தக வாகன பிரிவின் முக்கியப் பதவியில் இணைந்தார்.
ஃபோர்டு நிறுவனம் இந்திய உற்பத்தி சந்தையில் வெளியேறுவதாக அறிவித்த 15 நாட்களில் அனுராக் மெஹ்ரோத்ரா டாடா குழுமத்தில் சேர்ந்துள்ளார்.

48 வயதாகும் அனுராக் மெஹ்ரோத்ரா தற்போது டாடா வர்த்தக வாகன பிரிவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாயத் துணைத் தலைவராகப் பதவியேற்றுள்ளார். இவரது இணைப்பும் டாடா மோட்டார்ஸ் சென்னை தொழிற்சாலை கைப்பற்றலையும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஃபோர்டு - டாடா ஃபோர்டு - டாடா குஜராத் சனந்த் பகுதியில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு தொழிற்சாலைகள் அடுத்தடுத்து உள்ளது. டாடா தொழிற்சாலையில் டியாகோ மற்றும் டிகார் கார்களும், டாடா தொழிற்சாலையில் பிகோ, ப்ரீஸ்டைல், ஆஸ்பயர் ஆகிய கார்கள் தயாரிக்கப்படுகிறது.

சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் எகோஸ்போர்ட் மற்றும் எண்டேவர் எஸ்யூவி கார்களைத் தயாரித்து வருகிறது, டாடா சமீபத்தில் எஸ்யூவி பிரிவில் பல புதிய கார்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் சென்னை தொழிற்சாலையைக் கைப்பற்றுவதன் மூலம் டாடா கூடுதலான எஸ்யூவி வர்த்தகத்தை உருவாக்க முடியும். 74 நிறுவனங்கள் 74 நிறுவனங்கள் சென்னை ஃபோர்டு தொழிற்சாலைக்குச் சுமார் 74 நிறுவனங்கள் உதிரிப்பாகங்களைச் சப்ளை செய்து வருகிறது.
இதில் பல நிறுவனங்கள் தங்களது மொத்த உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதத்தை ஃபோர்டு நிறுவனத்திற்கு அளித்து வருகிறது. சில நிறுவனங்கள் மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் உற்பத்தி பொருட்களை ஃபோர்டு நிறுவனத்திற்கு அளித்து வருகிறது.

 2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் டாடா குழுமம் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் உடன் தொழிற்சாலை மற்றும் வர்த்தகத்தை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,763 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது. டிசிஎஸ் டிசிஎஸ் இதேபோல் டாடா குழுமத்தின் ஐடி சேவை பிரிவான டிசிஎஸ் சென்னையில் புதிதாக இரு ஐடி அலுவலகத்தைச் சிப்காட் மற்றும் சிறுசேரி பகுதியில் விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரு அலுவலகம் மூலம் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என டாடா அறிவித்துள்ளது.

சென்னை என்னூர் துறைமுகம் மற்றும் தச்சூர் பகுதியை இணைக்கும் முதல்கட்ட ரிங் ரோடு திட்டத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 2,100 கோடி ரூபாய், இப்புதிய ரிங் சாலை மூலம் துறைமுகப் போக்குவரத்து பெரிய அளவில் மேம்படும். இப்படி டாடா சென்னையில் பல முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது


கருத்துகள் இல்லை: