சனி, 9 அக்டோபர், 2021

வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மாலைமலர் : சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.
இந்நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். 

வடிவேலு கோர்ட் சூட் அணிந்தபடி கெத்தான தோற்றத்துடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: