புதன், 6 அக்டோபர், 2021

அசோக்வர்த்தன் ஷெட்டி கனடாவில் இருந்து வருகிறார்! ஜெயாவால் பந்தாடப்பட்டவர் .. விரைவில் முதல்வர் ஆலோசகராக நியமனம்?

 ஜெ. ஆட்சிக் கால டார்ச்சர்

  Mathivanan Maran  -  Oneindia Tamil :   சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசகராக மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தலைமை செயலாளர், முதல்வரின் ஆலோசகர்கள் என ஒவ்வொரு பொறுப்பிலும் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் இந்த தொடக்கமே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இருந்தபோதும் முதல்வர் தரப்பில் ஆலோசகர் பதவிக்கு என ஒரு தனிடம் ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு மாஜி அதிகாரிக்குதான்.
அவர்தான் தமிழகம் நன்கு அறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி. அன்றைய ஆலோசகர் ஷெட்டி அன்றைய ஆலோசகர் ஷெட்டி திமுகவின் 2006-2011 ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது உள்ளாட்சித்துறை செயலாளராக இருந்தவர்

ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டிதான். மு.க.ஸ்டாலினுக்கு அரசு நிர்வாகம் குறித்த முழுமையான ஆலோசகராகவும் அசோக்வர்தன் ஷெட்டி செயல்பட்டார்.
ஜெ. ஆட்சிக் கால டார்ச்சர் 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், மு.க.ஸ்டாலினை சிறைக்குள் தள்ள முடிவு செய்தார். அப்போது மு.க.ஸ்டாலினின் ஆலோசகராக இருந்த அசோக்வர்தன் ஷெட்டியிடம் அவருக்கு எதிராக ஊழல் புகார் கொடுக்குமாறு வலியுறுத்தினார் ஜெயலலிதா. ஆனால், இதனை அசோக்வர்தன் ஷெட்டி திட்டவட்டமாக ஏற்க முடியாது என சொல்லிவிட்டார்.

தமது பேச்சை கேட்காத ஒரு அதிகாரி தமது அரசாங்கத்தில் இருப்பதா? வழக்கம் போல முதல்வராக இருந்த ஜெயலலிதா டார்ச்சர் ஆயுதங்களை கையில் எடுத்தார். விருப்ப ஓய்வில் அரசு பணியிலிருந்து விலகிச் செல்லத்தான் வேண்டும் என அசோக்வர்தன் ஷெட்டிக்கு நாலா திசையிலும் ஜெயலலிதா தரப்பு டார்ச்சர் கொடுத்தது.
இதனால் வெறுத்துப் போன அசோக்வர்தன் ஷெட்டியும் ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு பல்வேறு சம்பவங்கள் நடந்தன. எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆலோசனை எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆலோசனை ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும் வகையில் மத்திய அரசின் ஒரு நிறுவனத்தில் மிக மிக முக்கிய பொறுப்பிலும் அமர்ந்தார் அசோக்வர்தன் ஷெட்டி.
இதெல்லாம் அப்போதைய பரபரப்பு சம்பவங்கள். அதன்பிறகு குடும்பத்தினருடன் கனடாவில் செட்டிலாகி விட்டார் ஷெட்டி. அதேசமயம், மு.க.ஸ்டாலின் தரப்புடனான தொடர்பு மட்டும் நீடித்தபடி இருந்தது. எதிர்க்கட்சியாக மு.க. ஸ்டாலின் செயல்பட்டபோதும் பல ஆலோசனைகளை ஸ்டாலின் தரப்புக்கு வழங்கினார்

இந்த நிலையில், திமுக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் சூழலில், தமிழக அரசின் ஆலோசகராக ஷெட்டியை கொண்டு வர விரும்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இது தொடர்பாக அவரிடமும் பேசப்பட்டதாம். ஆனால், உடனே வேண்டாம்; கொஞ்ச நாள் பொறுங்கள் என்று சொல்லி தனது சிஷ்யர்களான சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி அரசு நிர்வாகத்தில் அவர்களது ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள் என சொல்லியிருந்தார். அதன்படி, அந்த ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த ஆலோசனைகள் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் அசோக்வர்தன்ஷெட்டி சென்னைக்கு வந்துள்ளார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் - அசோக்வர்தன் ஷெட்டி இடையேயான சந்திப்பு கிழக்கு கடற்கரை சாலை பங்களாவில் நடந்துள்ளது என்றும் சொல்கின்றனர். அதனால், தமிழக அரசின் ஆலோசகராக விரைவில் அசோக்வர்தன் ஷெட்டி நியமிக்கப்படுவார் என்று கோட்டையிலுள்ள உயரதிகாரிகள் தரப்பில் ரகசியமாக விவாதிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: