ஞாயிறு, 3 அக்டோபர், 2021

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து ..200 கோடி ரூபாய் ஜீவனாம்சதை வேண்டாம் என உதறிய சமந்தா

பெயர்கள் மட்டுமே மாறியது

Kalaimath  - tamil.filmibeat.com :  சென்னை: நாக சைதன்யாவின் குடும்பத்தினர் ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுப்பதாக முன்வந்தும் அதனை வேண்டாம் என மறுத்துள்ளார் நடிகை சமந்தா.
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யா விவாகரத்துதான் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக உள்ளது.
சமந்தா - நாக சைதன்யா ஜோடி பல படங்களில் இணைந்து நடித்துள்ளது.
ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் பின்னர் காதலாக மாறியது.
சுமார் 7 வருடங்கள் இருவரும் காதலித்தனர். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இருவரும் பிரிவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இருவரும் ஒரே மாதிரியான போஸ்டரையே தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர். இருவரும் ஷேர் செய்த போஸ்டரில் பெயர்கள் மட்டுமே மாறியிருந்தது.மோசமான காட்சிகளே காரணம் மோசமான காட்சிகளே காரணம் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது.
சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் படுக்கையறை காட்சிகள் மற்றும் படு மோசமான காட்சிகளில் நடித்ததே அதற்கு காரணம் என கூறப்பட்டது.
ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் ?
குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பு இதனால் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தும், சமந்தா நடிப்பதில் பிடிவாதமாக இருந்ததாலேயே அவர்களின் 4 ஆண்டு திருமண வாழ்க்கை விவகாரத்து வரை சென்றதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் சமந்தா விரும்பவில்லை என்பதும் நாகார்ஜூனா குடும்பத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல் பரவி வருகிறது.

இருவரையும் இணைத்து வைக்க பல நாட்களாக பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் சமந்தாவின் பிடிவாதமே விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நாகார்ஜூனா குடும்ப விழாக்களை நடிகை சமந்தா புறக்கணித்து வந்துள்ளார்.

ரு.200 கோடியை ஏற்க மறுத்த சமந்தா இதனால் இருவருக்குள்ளும் விரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்ட நிலையில் நடிகை சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக தருவதாக நாக சைதன்யாவின் குடும்பத்தினர் பேசியுள்ளனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த சமந்தா, நான் நன்றாக சம்பாதிக்கிறேன் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. பிரபலங்கள் அப்செட் பிரபலங்கள் அப்செட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து முடிவுக்கு வந்தது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் சினிமா பிரபலங்களும் இருவரின் விவாகரத்து முடிவால் அப்செட் ஆகியுள்ளன

கருத்துகள் இல்லை: