புதன், 25 ஆகஸ்ட், 2021

பார்ப்பனர்கள் மீது வெறுப்பு பிரசாரம்? சமூக ஊடகங்களில்

May be a closeup of child and outdoors
May be an image of sky

செல்லபுரம் வள்ளியம்மை : ஆரிய பார்ப்பனீய கோட்பாடுகள் தவறானவை என்பது இன்று உலகம் முழுவதும் ஓரளவு ஏற்று கொள்ளப்பட்ட உண்மையாகும்
குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆரிய பார்ப்பனீய சக்திகள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்களின் கோட்பாடுகள் எவ்வளவு மோசமானவை என்பதை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது
முன்பெல்லாம் சமஸ்கிருதம் ஆரியம் பார்ப்பனீயம் பற்றி எல்லாம் மேலை நாட்டவர்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
காலகாலமாக போலியாக கட்டி எழுப்பப்பட்ட போலி பிம்பத்தை அவர்கள் நம்பி இருந்தார்கள்
அந்த ஆயிரம் ஆண்டு ஆரிய கலாச்சாரத்தின் காட்டுமிராண்டி முகத்தை கடந்த எழுவருட பாஜக ஆட்சி நிர்வாணமாக காட்டிவிட்டது
மோடியரசின் மதவெறியாகட்டும் வடமொழி வெறியாகட்டும் பொருளாதார தகிடு தந்தங்கள் ஆகட்டும் . எல்லாமே ஒரே செய்தியைத்தான் சொல்கிறது
ஆரியம் என்பது ஒரு பேரழிவு கருத்தியல் என்பதுதான் அது.
மெல்ல மெல்ல உறுதியாக திராவிட கருத்தியல் ஆழமாக வேரூன்றி கொண்டிருக்கிறது
உலகம் கண்ணை திறந்து பார்த்து அதிசயிக்க தொடங்கி இருக்கிறது
மோடியரசுக்கு எதிராக எழுந்த மாநில அரசுகளின் எழுச்சிகளை உலகம் அவதானித்து கொண்டுதான் இருக்கிறது
ஆரிய கருத்துக்களின் அடிப்படை தூள் தூளாக நொறுங்கி கொண்டு இருக்கிறது

ஒருவேளை தற்போது இதை நம்புவதற்கு நீங்கள் மறுக்கலாம்  .
தவறில்லை  அது எதிர்பார்க்க கூடியதுதான்
ஆயிரம் ஆண்டுக்களாக ஒரே பக்கமாக அடித்துக்கொண்டிருந்த காற்று இன்று திசை மாறி வீச தொடங்கி விட்டது என்பதை மனித மனம் நம்ப மறுப்பது இயல்பானதே.
நம்ம சுற்றி நடக்கும் சம்பவங்களை உற்று நோக்கினால் தெரியும்,
 அந்த காற்று இப்போது திசை மாறி வீச தொடங்கி விட்டது
இந்த திசை மாற்றம் எளிதில் நடந்துவிடவில்லை
ஆயிரம் ஆண்டுகளில் இலட்சோப இலட்சம் ஊர்  பேர் தெரியாத மனிதர்களின் வேர்வையும் கண்ணீரும் இரத்தமும்,
இன்று வீச தொடங்கி இருக்கும் காற்றில் கலந்து இருக்கிறது
தேரை நகர்த்தி விட்டு சென்றிருக்கிறார்கள் நமக்கு முன்னே தோன்றிய அந்த உன்னத மனிதர்கள்
இந்த தேரை மேலும் மேலும் நகர்த்தவேண்டிய பெரும் பொறுப்பு எம்மீது இனிய சுமையாக எமது தோள்களிலும் கரங்களிலும் இருக்கிறது

நாம் சிந்திப்பதுவும் பேசுவதும் எழுதுவதும்  செயல்படுவதும் அந்த தேரை முன்னே நகர்த்தும்
செயல்தான் என்பதை ஒருபோதும் மறக்க கூடாது
இன்று நமக்கு கிடைத்திருக்குக்ம் வாய்ப்பு ஒரு ஆயிரம் ஆண்டுகளில் கிடைத்திராத  பெருவாய்ப்பாகும்
நேரத்தை வீணடித்தால் இந்த காற்று நம்மை மன்னிக்காது
இந்த சிறு குறிப்பை நான் இப்போது எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது
எம்முன்னால் இருப்பது ஆரியம் விதைத்து விட்டு போயிருக்கும் பார்ப்பனீய கோட்பாடு மட்டுமே.
எந்த பார்ப்பனர்களும் அல்ல என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்
ஏனெனில் பார்ப்பனர்கள் என்பவர்கள் குற்றவாளிகள் அல்ல  அவர்களும் சாதாரண மனிதர்கள்தான்
பார்ப்பனீயம் என்பது அதை நம்புவர்களுக்கு ஒரு விலங்காகவே இருக்கிறது .
இந்த உண்மையை பார்ப்பனர்களுக்கு விளங்க படுத்தவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது
அதிலும் பார்ப்பன பெண்கள் இன்றும் கூட பெண்கள் என்பதற்காக ஒடுக்கப்படுகிறார்கள்
ஆனால் அந்த ஒடுக்குமுறையை புரிந்து கொள்ளும் அறிவிலில்லாமல் பலரும் இருக்கிறர்கள் என்பதுதான் உண்மை
பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி என்பதற்காக சக பார்ப்பனர்களை சக மனிதர்களாக கருதுகிறர்கள் என்பதில்லை
ஏற்ற தாழ்வுகள் அவர்களிடம் அதிகமாகவே உண்டு
அவற்றால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் கூட  திராவிட கருத்தியல்தான் விடுதலையை கொடுக்கும்
அவர்களின் சுயமரியாதை மீட்டு  எடுக்கப்படவேண்டும்
அவர்களை பொதுமை படுத்தி ஓட்டும் மொத்தமாக எதிரியாக கட்டமைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை
அதை தற்போது பலரும் செய்கிறார்கள்.
உதாரணமாக மதுவந்தி லட்சுமி ராமகிருஷ்ணன்  கஸ்தூரி சின்மயி போன்றவர்களை பொதுமை படுத்தி தாக்குவது மிகவும் அநாகரீகமானது
இந்த விடயத்தில் கலைஞரை ஞாபக படுத்தி கொள்வது நல்லது
கலைஞரை இன்றும் கூட ஞாபகத்தில் வைத்திருந்து போற்றும் பார்ப்பனர்கள் அதிகமாகவே உண்டு
பலர் வெளியில் கூறுவதில்லை  ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது அவற்றை தெரியப்படுத்துவார்கள்
எனக்கு கூட கலைஞர் பற்றி முதல் முதலில் அதிகமாக கூறியது ஒரு பெசன்ட் நகர பார்ப்பனர்தான்
அவர் ஒரு டெட்ரோய்ட்டில் படித்து கொண்டிருந்த காலம் அது.
பார்ப்பனர்களை தனிப்பட்ட ரீதியில் தரம் குறைந்து எள்ளிநகை ஆடுவது சரியல்ல
நாம் ஒரு பாரம்பரிய திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள்  எங்கள் தகுதி மிகவும் பெரிது
அதன் மாண்பு காப்போம்    
 

கருத்துகள் இல்லை: