வியாழன், 26 ஆகஸ்ட், 2021

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு- சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

 மாலைமலர் : அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது போல் ஏனைய தொழிற்கல்வி படிப்புகளிலும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது போல் ஏனைய தொழிற்கல்வி படிப்புகளிலும் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த 4-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை, தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது

கருத்துகள் இல்லை: