வியாழன், 19 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை.. எல்லாம் ஷரியத் சட்டம்தான்.. தலிபான்கள் அறிவிப்பு

 Vishnupriya R  -   Oneindia Tamil :   காபூல்: ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, எல்லாம் ஷரியா (ஷரியத்) சட்டத்தின்படி நடக்கும் என தலிபான்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆட்சியை யார் நடத்துவார் என்ற கேள்வி எழுகிறது. இடைக்கால அரசு குறித்தெல்லாம் வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் இதை தலிபான்கள் அமைப்பு மறுத்துள்ளது.
இந்த நிலையில் ஆட்சி குறித்தும் அதிகாரம் குறித்து தலிபான்களின் மூத்த தலைவர் வஹிதுல்லா ஹாஷிமி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் எப்படி ஆட்சி செய்வர் என்பது குறித்து நிறைய விஷயங்கள விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஆப்கானிஸ்தான் ஒரு ஜனநாயக நாடாக இருக்காது.
ஆப்கானிஸ்தானில் எந்தமாதிரியான அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது குறித்து நாங்கள் இதுவரை விவாதிக்கவில்லை.

ஷரியத் சட்டத்தின் அடிப்படையில்தான் அரசியல் அமைப்பு இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும் போது அதுகுறித்து விவாதிக்க என்ன இருக்கிறது?
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் இருக்காது, ஏனெனில் நாட்டில் ஜனநாயகத்திற்கான அடிதளமே இல்லை. அப்படியிருக்கும் போது ஏன் ஜனநாயக நாடாக ஆப்கானிஸ்தான் இருக்க வேண்டும்?

1996- 2001 வரை ஆட்சி 1996- 2001 வரை ஆட்சி கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள்தான் ஆட்சி செய்தனர்.
அப்போது எப்படி ஆட்சி செய்ததோ அப்படியே இந்த முறையும் ஆட்சி செய்வோம். அந்த நேரத்தில் மூத்த தலைவர் முல்லா உமர் எங்களுக்கு நிழலாக இருந்தார்.
நாட்டின் அன்றாட நிர்வாகம் குறித்து ஆட்சி மன்றக் குழுவே பார்த்துக் கொள்ளும். நாட்டின் அதிபர் நாட்டின் அதிபர் இந்த குழுவின் தலைவராக அக்குன்ஜாடா இருப்பார் என தெரிகிறது.
மேலும் அவரே நாட்டின் அதிபராகவும் பதவியேற்பார். நாட்டில் புதிய படைகள் ஏற்படுத்தப்படும்.
அதன்படி ஆப்கானை சேர்ந்த முன்னாள் விமானிகள், ராணுவ வீரர்கள் மீண்டும் படைகளில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

இவர்கள் எல்லாம் இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனியில் பயிற்சி முடித்தவர்கள். சிறிய மாற்றங்கள் சிறிய மாற்றங்கள் எனவே அவர்களை மீண்டும் தங்கள் இடங்களில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ராணுவத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த சிறிய மாற்றங்கள் செய்யப்படும் என்றார். கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களால் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் இவர்கள் எப்படி ஆட்களை தேர்வு செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தோஹாவில் உள்ள பராதர் தோஹாவில் உள்ள பராதர் இதனிடையே முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய்

தலிபான் கமாண்டரும் மூத்த அதிகாரியுமான ஹக்கானியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. ஆப்கானை ஆளும் தலிபான் அதிபருக்கு 3 துணை அதிபர்கள் இருப்பர் என தெரிகிறது. அவர்கள் முல்லா உமரின் மகன் மவ்லாவி யாகூப், ஹக்கானியின் நெட்வொர்க்கின் தலைவர் சிராஜூதீன் ஹக்கானி, தோஹாவில் உள்ள அப்துல் கானி பராதர் ஆகிய மூவர் என தெரிகிறது.

பெண்களும் வேலை செல்ல தலிபான்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஹரியத் சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது போல் நாட்டை விட்டு வெளியேறிய அரசு ஊழியர்களையும் அவர்கள் நாடு திரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனாலும் இவர்கள் நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடியை அகற்றி போராடிய மக்களை தலிபான்கள் சுட்டதால் 3 பேர் பலியாகிவிட்டனர்.
மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். என்னதான் தாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம் என சொன்னாலும் சிறிய எதிர்ப்பை கூட சகித்துக் கொள்ள முடியாமல் துப்பாக்கியால் சுடும் தலிபான்களின் செயல்பாடுகளை கண்டு மக்கள் அஞ்சியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: