புதன், 18 ஆகஸ்ட், 2021

பெண் உரிமை பற்றிய கேள்விக்கு கேலியாக சிரித்த தாலிபான்கள்- வைரல் வீடியோ

News18 Tamilஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா என்று கேட்ட போது தாலிபான்கள் சிரிப்பில் ஆழ்ந்து ‘நிறுத்து’ என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா என்று கேட்ட போது தாலிபான்கள் சிரிப்பில் ஆழ்ந்து ‘நிறுத்து’ என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.
பெண் பத்திரிகை நிருபர் ஒருவர் தாலிபான்களிடம் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்தப் பெண் நிருபர் தாலிபான்கள் பெண்களுக்கு உரிமையளிப்பார்களா என்று கேட்ட போது, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் பெண்ணுரிமை காக்கப்படும், என்றனர்.
பிறகு அதே பெண் பத்திரிகை நிருபர் பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா என்று கேட்ட போது, சிரிப்பில் ஆழ்ந்த தாலிபான்கள், படம்பிடிப்பதை நிறுத்து என்றனர்.

ஒரு தாலிபான் போராளி ‘இந்த நிருபர் கேட்கும் கேள்வி சிரிப்பை வரவழைக்கிறது’ என்று கூறியதும் பதிவாகியுள்ளது.

ஆப்கானைக் கைப்பற்றிய தாலிபான்களின் தலைவர் தங்களுடைய முதல் செய்தியாளர்கள் சந்திப்பில், “பெண்கள் சமூகத்தில் செயல்பூர்வமாக இருப்பார்கள் ஆனால் இஸ்லாமியம் என்ன கூறுகிறதோ அந்த சட்டத்திட்டங்களுக்குட்பட்டுத்தான்” என்றார்.

இதற்கிடையே 20 ஆண்டுகாலம் ஆப்கானை ஆக்ரமித்து ஒரு பயனையும் பெற்றுத் தராமல் அமெரிக்கப் படைகள் வெளியேறியது சரியே என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். தாலிபான்களுடன் அமெரிக்க ராணுவத்தினர் போர் செய்வதில் அர்த்தமில்லை, அவசியமும் இல்லை என்று கூறியதோடு ஆப்கான் மக்கள்தான் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று கூறி கைவிரித்து விட்டார்.

ஆப்கான் படைகளே அவர்களுக்காக போராடத் தயாராக இல்லாத போது அமெரிக்க படைகள் போரில் சண்டையிட்டு போரிலே மடிய தயாராக இல்லை. ஆப்கான் ராணுவத்திற்காக ட்ரில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளோம்.

3 லட்சம் ஆப்கான் வீரர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்துள்ளோம். தாலிபான்களிடம் இல்லாத கருவிகளை எல்லாம் இவர்களுக்கு கொடுத்துள்ளோம். தாலிபான்களிடம் விமானப்படை கிடையாது. ஆப்கான் வீரர்களுக்கு அதையும் கொடுத்துள்ளோம். எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்கினோம்.

எதிர்காலத்திற்காக போராடுவதற்கான உதவேகத்தை எங்களால் அவர்களுக்கு வழங்கமுடியவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைவிரித்தார்.

கருத்துகள் இல்லை: