சனி, 21 ஆகஸ்ட், 2021

திரையரங்குகள் திறப்பு, கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி: அரசு அறிவிப்பு

  Rayar A  -  Oneindia Tamil News  :  சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து.. !என்ன காரணம்.. ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து.. !
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது
இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செம்படம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.

ஆகஸ்ட் 23 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுளள்து. ஆனால் 50% பார்வலையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆந்திரா,கர்நாடாகா மாநிலங்களுக்கு பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் இயங்கும் மது பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: