வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கார்த்தகீனியா - 17 - சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா....? கானா Ghana

May be an image of outdoors and monument

புகச்சோவ்  :  கார்த்தகீனியா - 17  -  சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா....?
கானா Ghana
      கிபி1250 க்கு பிறகு கானா மாலி பேரரசின் சிற்றரசானது. மாலியின் மன்டின்கே அரசன் Mansa musa keita இஸ்லாமிய கலப்பில் வந்த முதல் அரசனாவான். மன்சா என்பது மனுஷ்யன் அல்லது மன்னன் என்பதன் வேர்சொல்லாக இருக்கவேண்டும். மன்சா என்றால் மன்னன் என்பதாகும். இவனது காலத்தில் யோருபா மாகாணம் இன்றைய நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியாகும். இங்கே சோனின்கே மற்றும் மன்டின்கே மக்களின் மதமானது Hard knowledge ( கடும் அறிவு அல்லது பட்டறிவு, தர்மத்தை ஒழுகுதல்) என சொல்லப்படுகிறது.


           இரண்டாவது  சோங்காய் படையெடுப்பில் வாங்கரா மக்கள் வீழ்த்தப்பட்டனர். மூன்றாவதாக நடந்த தோல்வியில் ஹவ்சா, புல்லானி,      யோருபா, நைஜீரியன் பகுதி மக்களின் உட்பிரிவுகளான நாகா,அயோ,இபி,இளோரின், இசிபு குடிகள் தனிப்போந்தனர். கிபி 1600 ல் அட்லான்டிக் கடல்வழிகள் இயங்க ஆரம்பித்தவுடன் ட்ரான்ஸ் சஹாரா வியாபாரம் வடமேற்கு ஆப்ரிக்க கரையோரமாக சுருங்க ஆரம்பித்தது. வடக்கின் பார்பரி கோஸ்ட்லிருந்து தெற்கின் பெப்பர்கோஸ்ட் வர்தகம் கரைசார்ந்து நடைபெற்றதால் சோனின்கேயினர் அட்லான்டிக் கரையை நோக்கி இடம்பெயர்ந்தனர். அதற்கு தலைமையேற்றவர் கானாவின் தாய்வழியுறவு வாரிசான லேடி மாபதி மகாரிகா ஆவார் கிபி 1570.
             கிபி 1500 வீழ்ச்சிக்கு பிறகு சோனகர்களின் இடப்பெயர்வு மோசி, நைஜர் பள்ளத்தாக்கு நோக்கியதாக இருந்தது. அதேவேளையில் சோங்காய் பேரரசு எழுச்சியுற்றது குருமாவில். மொராக்கோ பெர்பெர்களின் மாலி மீதான படையெடுப்பும் காரணமானது. கிபி 1349 லிருந்து 1385 வரை அரசில் அதிகாரம் பெற்றிருந்த ஹவ்சா குடிகள் 160 தலைமை கும்பங்களுடன் கானோவில் குடியேறியது. அப்போதுதான் இஸ்லாம் மதம் சாகாயினரால் மெஸினாவில் ஏரி பகுதியில்  பரப்பப்பட்டது. இதனால் ஹவ்சா சோனகர்கள் இரு பிரிவாக பிரிந்து லோபி, ஏர் பகுதிகளில் குடியேறினர்.
                வோல்ட்டா நதிக்கரை, மசினா ஏரிக்கரை பகுதிகளில் தங்கத்துகளும், ப்ரா, பிரம் நதிக்கரைகளில் வைரமும், தாதுக்களும், பாஸ்பரஸ், கோலா ஆகியவைகளும் கிடைத்தன. சாதிகள் சூடானின் சாதிமுறையை போன்றன. கிழக்கு பகுதிகளான சாட் ஏரிக்கரை புல்லானி, கானோ குடிகளிடமிருந்தாலும் அப்பகுதியின் அரபு பழங்குடியினர் காணம்,போர்னு,நைலொ சஹாரன், சாடிக்,கனூரி,தீபு,பாகுயிர்மி,மந்தாரை, வாடையினர் மாலியை கைப்பற்ற காத்திருந்தனர். மட்டுமல்ல இந்தப்பகுதி வழியாகத்தான் கிழக்கு நாடுகளுக்கு எதுவும் செல்லமுடியும்.
        ஏற்கெனவே கிபி 1285 ல் சுந்தர கேதனுக்கு பிறகு ஆட்சிக்குவந்த அடிமை வம்ச மாலியன் அரசன் சகோர கேதன் இதே காணம் பகுதியில் அபார்(அரபு) பழங்குடியின கத்திச்சண்டை கூலிப்படையால் கொல்லப்பட்டிருந்தான்.
இஸ்லாமியர்களே இக்கொலைக்கு காரணமானவர்களாவர். சகோர கேதன் பிணம் கானோ பகுதியில் கிடப்பதாக நாடோடிகள் கூறியபிறகே கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சோனகர்களும் மண்டன்களும் சாட் ஏரிக்கு கிழக்கேயுள்ள பகுதிகளை கைவிட்டனர்.
                 சகோர கேதன் எத்தியோப்பியா வழியாக செங்கடலை கடந்து அரேபியா சென்றுவரும் வழியில் அரேபியர்களால் கொல்லப்பட்டதின் காரணம் சோனின்கே குடிகளிடமிருந்து அரசாட்சியை இஸ்லாமியர் கைப்பற்றுவற்காகவே. அதன்படி சரியாக 1400 ல் மன்சா மூசா அரியணையேறவும் செய்தான். சகோர கேதனை கொலைசெய்த அரேபியன் பிலால் இபின் ரபாவின் 7 மகன்களின் வாரிசுகளில் ஒருவனே மாலியுடனான திருமண உறவின் மூலம் முதல் கானா அரசின் மன்னனானான்.
13 ம் நூற்றாண்டின் கானா மசூதி மௌரிட்டானிய பெர்பெர்களூக்காக கட்டப்பட்டது. பச்சை மண் கட்டிடம்.
தொடரும்...

கருத்துகள் இல்லை: