வியாழன், 19 ஆகஸ்ட், 2021

1650 மருத்துவ சீட்கள் இந்த ஆண்டிற்கான தொகுப்பு கிடைத்துள்ளன. ஒவ்வொரு மாவட்ட கல்லூரிக்கும் 150 சீட்கள் அதிகமாக கிடைக்கும் .. அமைச்சர் மா. சுப்பிரமணியம்

நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்-  Dinamani

Muralidharan Pb   :  நேற்றைய சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் சில உண்மைகளை அற்புதமாக பதிவு செய்தார்.
1650 மருத்துவ சீட்கள் இந்த ஆண்டிற்கான தொகுப்பு கிடைத்துள்ளன. அதனால் 150 சீட் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கல்லூரியிலும் அதிகமாக கிடைக்கும் என்ற தகவலை அண்ணன் மாசு கூற, அதற்கு அதிமுக சமஉ ராஜன் செல்லப்பா, அதிமுக கொண்டு வந்த 11 மருத்துவக் கல்லூரிகள் தான் காரணம் என பேச,
அமைச்சர் உண்மைகளை ஒவ்வொன்றாக அடுக்கினார்.
2006ல் கலைஞரின் செயல்திட்டமான மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகள் என்ற கொள்கையை நிறுவிய அரசு, 11 கல்லூரிகளுக்கு ஒன்றிய மருத்துவத் துறையில் ஒப்புதல் பெற்று, 6 கல்லூரிகளை 2006-2011 ஆட்சிக்குள் முடித்துவிட்டார்.
ஒன்றிய துறையின் சார்பில் மூன்று வாரங்களாக மாவட்டத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து வந்த விவரத்தை கூற,
முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, அம்மையார் 2011 துவக்கத்தில், 1945 என்றிருந்த மருத்துவ சீட்கள் 5200 ஆக உயர்ந்தது என்று வாதிட்டார்.
அப்போது, தான் திமுகவுக்கு சாதகமாக பேசுகிறோமே என்பது கூட தெரியாமல் பாயிண்ட் எடுத்துக் கொடுத்தார் அண்ணன் பழனிச்சாமி.
அடுத்ததாக மாநிலத்தில் நிறைய அரசு மருத்துவ கல்லூரிகளையும் துவங்கப்பட்டதும் திமுகவின் திட்டத்தில் என்ற உண்மை விளங்குகிறது.

திட்டமாக போட்டு, அனுமதி பெற்று, கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி, வேவைகளை துவங்கியது திமுக அரசு. ஆனால் வெறும் ரிப்பன் வெட்டியது அம்மையாரும் பழனிச்சாமியும் என்பது தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

கடைசியாக அமைச்சர் உண்மையை போட்டுடைத்தது தான் உச்சக்கட்ட விவரம். சென்ற வாரத்தில் பெரம்பலூர் சென்றுவந்ததாகவும், முன்னாள் ஒன்றியத் தொலைத்தொடர்பு துறை அமைச்சரும் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த அண்ணன் ஆ.ராசாவின் பரிந்துரையின் பேரில் 35 ஏக்கர் நிலம் பெரம்பலூரில் ஒதுக்கியது மாநில அரசு. அதுவும் அரசு மருத்துவமனை கட்டிடவே.
ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக 10 ஆண்டில் அதைக் கெடுத்து அந்த இடத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு அவர்கள்.
வாயை கொடுப்பானேன் வாங்கிக் கட்டிப்பானேன்.
இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் அந்த 65 உறுப்பினர்களிமிருந்து.

 Kandasamy Mariyappan  :  புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல் மூன்றையும் கிடப்பில் போட்டது செல்வி ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சி அரசு.

கருத்துகள் இல்லை: