புதன், 18 ஆகஸ்ட், 2021

பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு தலிபான்கள் வலியுறுத்து

 soodram  :தமது வெற்றி மகத்தானது என்று கூறும் தலிபான் தலைவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள், நாடு தமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென்று உறுதியளித்துள்ளனர்
ஆனால், தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் மீது தலிபான்கள் தாக்குதல்களை நடத்துவதாகவும், கைது செய்யப்பட்ட வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் அவர்கள், தமது வீரர்களுக்கு திருமணமாகாத பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு தலிபான் கமான்டர்கள் வற்புறுத்துகிறார்கள் என்றும் கூறினர்.
இது பாலியல் வன்முறை !  இதேவேளை, சரணடைந்த ஆப்கான் இராணுவ வீரர்களுக்கு தலிபான்கள், மரண தண்டனை விதிப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், இது ஒரு போர் குற்றமென்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.


தலிபான் செய்தித் தொடர்பாளரான சபியுல்லா முஜாஹித், கைதிகள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருப்பதுடன் அவ்வாறு செய்வது தமது கொள்கையை மீறும் செயல் என்றும் கூறியுள்ளார்.

பெண்களை கட்டாயத் திருமணம் செய்ய வற்புறுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அவ்வாறு நடப்பது இஸ்லாத்துக்கும் கலாசாரத்துக்கும் எதிரானது என்றும் கூறினார்.

தலிபான்களின் சிரேஷ்ட சமய தலைவர்களுள் ஒருவரான மௌலவி அப்துல் காதிர் சொற்பொழிவொன்றில் பேசும்போது, சரணடைந்த மற்றும் குற்றங்களை ஒப்புக்கொண்ட அரசாங்க படைவீரர்கள், இஸ்லாமிய கொடியின் கீழ் ஒரு முஸ்லிமாக வாழலாம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: