திங்கள், 16 ஆகஸ்ட், 2021

புலிகளிடமும் தலிபான்களிடமும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்

May be an image of 5 people, people standing and outdoors

Sugan Paris  :   தமிழ்த் தலிபான்களான புலிகளிடமும் ஆப்கான் தலிபான்களிடமும் குறிப்பிடத்தகுந்த வகையில் ஒற்றுமையுண்டு.
சாரம்சத்தில் இருவகையினரும் ஒரே குணாம்சம் கொண்டவர்கள்.
இடதுசாரி எதிர்ப்பு ,அடிப்படைவாத  மனப்பான்மை, தமது நோக்கங்களில் சர்வதேச நிலவரங்களைப் பகுத்தாராயாமை,
எந்த எல்லைக்கும் சென்று கொடூரங்களில் ஈடுபட்டு சமூகத்தை மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி தம்மை நிலைநிறுத்தல்,போதைப்பொருட்கள் விற்பனைகள் மூலம் தமது ஆயுத வளங்களைத் திரட்டுதல்,
எடுப்பார் கைப்பிள்ளைகளாக  கைக்கூலி
களாக இயங்குதல். தான்சார்ந்த முழுச் சமூகத்தையுமே நிர்க்கதிக்குள்ளாக்குதல், அடிப்படை ஜனநாயக விழுமியங்கள் குறித்த உதாசீனம் , கிடைக்கும் அரசியல் அதிகாரங்களை காப்பாற்றத் தெரியாமை ,ஆயுதமோகம் ,எப்போதும் குறுங்குழுக்களாக இயங்குவதிலேயே விருப்போடிருத்தல்,அரசியல் மட்டப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கைக்கு துரோகமிழைத்தல் இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.
அரசியல் மாற்றங்களில் தாம் நிலைகொண்ட பிரதேசங்களிலிருந்து ஈழத்தில் இந்தியாவும் ஆப்கனில் சோவியத்தும்  வெளியேறும்போது கிடைத்த நல் வாய்ப்புகளை சிறந்த தகவமைப்புக்கொண்ட
ஆட்சியதிகாரத்தை நிறுவக்கிடைத்த வாய்ப்புகள் குறித்து எள்ளளவும் கரிசனையற்றவர்கள் புலிகளும் தலிபான்களும்.
இப்போது தலிபான்கள் தாம் ஜனநாயக அடிப்படைகளைப் பேணப்போவதாக அறிக்கைவிடுகிறார்கள். மக்கள் தம் அதிகார வரம்பிற்குள் இருக்கவேண்டுமென பொய் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்.
பட்டறிந்த மக்கள் இவர்கள் பிரதேசங்களை விட்டு அண்டை நாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் கோருகிறார்கள்.


குறிப்பிடத்தக்க சிறு எண்ணிக்கையில் இவர்கள் சார்ந்த மக்கள் இவர்களுடன் இருக்கக்கூடும் .ஆனால் நீண்ட நாட்களுக்கு இது சாத்தியமில்லை.
தலிபான்களின் இந்த ஆட்சியில் தொடர்ந்தும் கொடும் அடக்குமுறையே நிலவும். அரசாக இருந்தாலும் தொடர்ந்தும் குறுங்குழுக்களாக இயங்கும் அடிப்படைக் குணாம்சம் கொண்டவர்கள் புலிகளும் தலிபான்களும்.
நிர்மூடனான பிரபாகரன் எப்படி தன் சமூகத்தை போர்ச்சூழலுக்குள் நிறுத்தி அழித்து ஒரு ஈழவகை கொடுங்கோலாட்சியை நிறுவினானோ அப்படியே இனிவரும் காலங்கள் தலிபானுக்கு இருக்கும்.
சர்வதேசம் தலிபான்களுடன் பேசுவது கண்துடைப்பு நாடகமே ! குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக்கொள்ள தவிர்க்கமுடியாமற்போடும் நாடகம். தலிபான்களைப்பற்றி பழமும்தின்று கொட்டைபோட்ட அரசுகள் அவை.
புதுச் சூழலில் இருக்கும் தலிபான்களை தம் அரசியற்பொருளாதார உறவுகளுக்காக இன்னொரு தடத்தில்  நாடிபிடித்துப்பார்க்கிறார்கள்.
1987.08.15 அன்று விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்திடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த நாள்.
LTTE cadre surrendering his weapon on 15th August 1987 at Jaffna(Sri Lanka)

கருத்துகள் இல்லை: