புதன், 17 மார்ச், 2021

நாளை முதல் ஊரடங்கு..மத்திய பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு!

Samayam Tamil : இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.                          இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு> விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன.                             பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்த வரிசையில், நாளை முதல் போபால்"இந்தூர்"ஆகிய நகரங்களில்  இரவு ஊரடங்கு. அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

 கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போதைய கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது, ஊரடங்கு விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.



முதற்கட்டமாக, மத்திய பிரதேசத்தின் இரு முக்கிய நகரங்களான போபால் மற்றும் இந்தூரில் ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு மட்டுமே விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊரடங்கின் நேர வரம்பு குறித்து தகவல் இல்லை.

கெடுபிடியான இரவு நேர ஊரடங்கு; மாநில அரசு போட்ட முக்கிய உத்தரவு!
போபால், இந்தூர் போக ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜய், ரத்லம், சிந்த்வாரா, புர்கான்பூர், பெதுல், கர்கோன் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கே கடைகள் அடைக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: