வெள்ளி, 19 மார்ச், 2021

இட ஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழியும்

May be an image of 5 people, beard, people standing and text
திராவிடர் சிந்தனையாளர் பேரவை! இட ஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழியும்
ஐயங்காரின் சாதி ஒழிப்பு ஐடியா. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியா இந்த பாப்பாரப் பரதேசி ஓநாய் நம்ப கிட்டேயே வந்து நிக்குது....
1. இட ஒதுக்கீடே இல்லாத கமலஹாசன் தனது அப்பா பெயரை சீனிவாச ஐயங்கார் என்று கூறத் தவறியதில்லை.
அவரிடம் ஐயங்கார் என்றால் என்னவென்று முதலில் கேள் பத்மபிரியா.
2.நான் என் குழந்தைகளுக்கு சாதி சொல்லி வளர்க்கவில்லை என்பார் கமலஹாசன். அவரது மகள் சுருதிஹாசனோ "நான் ஐயங்கார் வீட்டு பெண் என்று சொல்வது ஏன் என்று கேள் பதம்பிரியா.
3.உச்சத்தலையில் நான்கு முடிகளை மட்டும் வைத்துக் கொண்டு, மயிரிலும் கூட சாதி அடையாளத்தை சுமப்பது ஏன் என்று கேள் பத்ம்பிரியா.
4."யா" என்ற எழுத்தில் பெயர் முடிந்தால் அது பட்டியல் பிரிவினருக்கானது. எனவே "ணா" என்று முடியும் வகையில் பெயர் வைத்துக் கொள் என, சத்யாவை பார்த்து சத்யநாராயணா என்று வைத்துக் கொள் என்று சொன்ன வரலாறைக் கூறும் " என் தந்தை பாலையா" என்ற நூலைப் படிக்கச் சொல் பத்மபிரியா.
5.இட ஒதுக்கீடை நீக்கும் முன்பு, தலையிலிருந்து, தோளிலிருந்து, தொடையிலிருந்து, பாதத்திலிருந்து என்று உருவான முதல் இட ஒதுக்கீடை நீக்கச் சொல் பத்மபிரியா.
6.முருகன் என்று எந்தவொரு ஐயரும், ஐயங்காரும் பெயர் வைத்துக் கொள்வதில்லை. அதை முதலில் வைக்கச் சொல் பத்ம்பிரியா.
7.முன்னேறிய ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய என்று சொல்லி இட ஒதுக்கீடு கொடுத்தார்களே, அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய என்பது சரி. ஆனால் முன்னேறிய என்ற சொல்லுக்கு என்ன விளக்கம் என்று சொல்லச்சொல் பத்மபிரியா. சூடான ஐஸ் உண்டா?
8. சாமி என்ற சொல்லே தமிழில் இல்லை. அதை Samy என்று சூத்திரர் மற்றும் இதரபிரிவினரும், Swamy என்று W சேர்த்து பார்ப்பனர்கள் மட்டும் எழுதுவது ஏன் என்று கேள் பத்மபிரியா.
9. இட ஒதுக்கீடே இல்லாத அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற பிறகும் சாதியாகவே வாழ்கிறார்களே. அது ஏன் என்று கேள் பத்மபிரியா.
10.இங்கிலாந்தில் பார்ப்பனர்களால் பிற இந்தியர்கள் சாதி ரீதியாக அணுகப்படுகிறார்கள் என்று புகார் எழுந்து, Committee for the elimination of Racial Discrimination (CERD ) பரிந்துரையின்படி 9 (5 ) a Equality Act பிரிவில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி 2010 ல்
ஒரு உத்தரவு பிறப்பித்தது. இதை "உலக" நாயகன் அறிவாரா என்று கேள் பத்மபிரியா.
11. மேற்கண்ட நடவடிக்கை எடுக்ககூடாது என்று பார்ப்பனர்கள் இங்கிலாந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தை உலகநாயகன் அறிவாரா என்று கேள் பத்மபிரியா.
12. சாதிச்சான்றிதழ் இல்லாததால் கல்வி கிடைக்கவில்லை என்று பார்ப்பனர்கள் சொல்லியதில்லை. ஆனால் இருளர்கள் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்துவதை கமலஹாசன் அறிவாரா என்று கேள் பத்மபிரியா.
13.இருளர்கள் வாழ்க்கையில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும் வெளிச்சத்தை பாய்ச்சிவிடுவார்களா என்று கமலஹாசனிடம் கேட்டுச் சொல் பத்மபிரியா.
14.தேவர் மகனும், சபாஷ் நாயுடுவும் என்ன புரட்சிகரமான பெயர் என்று கேட்டுச் சொல் பத்ம்பிரியா
15.ஒடுக்குகிறவனோடு சண்டையிடாமல், ஒடுக்கப்படுகிறவனின் வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குவது தான் உங்களின் இட ஒதுக்கீடு பற்றிய அறிவா என்று கேள் பத்ம்பிரியா.
16. எதிலுமே சமத்துவமற்ற ஒரு சமூகத்தில் சமமான போட்டிக்கு எல்லோரும் வா என்று அழைப்பது ஏன் என்று கேள் பத்ம்பிரியா.
17. இந்திய சாதியச் சமூகத்தின் உண்மை முகம் இதுவாகவும், இன்னும் கொடுமையாகவும் இருக்கும் போது,
இட ஒதுக்கீடு தான் சாதிக்கு காரணம் என்று பேசுவது ஏன் என்று கேள் பத்மபிரியா.
18.ஆடு,மாடு,கோழி எல்லாம் உண்கிறீர்களே. புலி, சிங்கத்தை ஏன் உண்பதில்லை என்று கேட்கும் கூட்டத்தைப் பார்த்து, தக்காளி, கேரட், பீட்ரூட், கத்தரிக்காய்,புடலங்காய் போன்றவற்றை உண்ணும் நீங்கள் அரளிக்காயை ஏன் உண்ணுவதில்லை என்று கமலஹாசனைக் கேட்கச் சொல் பத்மபிரியா.
19.உடையிலிருந்து உணவு வரை, பிறப்பிலிருந்து பெயர் வைப்பது வரை எல்லாமே இங்கு சாதியமாக இருப்பதற்கு எது காரணம் என்று கேள் பத்மபிரியா.
20. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கமலஹாசன் அறிவித்துவிட்டு, தொண்டரடி பொடியாய் உங்களுக்கு சேவை செய்வேன் என்று புறப்பட்டாரே. அந்த தொண்டரடி பொடி யார் எனக் கேள். ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடி ஆழ்வாரா எனக் கேள். அவர் தான் தமிழர்களின் மூத்த தேவியை மூதேவி என்றும், பார்ப்பனர்களுக்காக ஸ்ரீதேவி என்றும் பெயரிட்டவர். அந்த வரலாறை கமலஹாசன் அறிவாரா என்று கேள் பத்மபிரியா.
சாதியென்பது கருவறையிலிருந்து கல்லறை வரை இருக்கிறது, பண்பாட்டில் இருக்கிறது, இந்திய வழமைகளில் ஊறிப்போய் இருக்கிறது, குடும்பச் சடங்குகளில் இருக்கிறது, திருமணச் சடங்குகளில் இருக்கிறது, பெண்கள் அணியும் தாலியில் இருக்கிறது, ஊராகவும் சேரியாகவும் இருக்கிறது, பார்ப்பன அக்ரஹாரத் தெருக்களில் இருக்கிறது, கோவிலில் இருக்கிறது, இந்தியர்கள் உலகின் எந்தெந்தப் பகுதிக்கெல்லாம் இடம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் இருக்கிறது.
சாதியம் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் பத்திரமாகப் பூட்டி, சாதிக்கு எந்தவொரு அடியும் கீறலும் ஏற்படாமல் சாதியை ஒழிக்கச் சொல்லப்படும் வழிமுறைகள் தான் இடஒதுக்கீட்டை ஒழிப்பதும், சாதிச் சான்றிதழை ஒழிப்பதும்.
இந்த மனநிலையைத்தான் "சாதியத்திற்கும் சான்றிதழுக்கும் இடஒதுக்கீட்டிற்கும்" தொடர்புள்ளது என்னும் பிரச்சாரத்தின் மூலம் வெற்றிகரமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு என்பது கல்வியிலும் பணியிலும் விகிதாச்சார ரீதியாக அனைத்துச் சமூகத்தவரும் பரவலாக எல்லா இடங்களிலும் பிரதிநிதித்துவம் பெற வேண்டுமென்கிற ஒரு குறைந்தபட்ச ஏற்பாடு.
அதன் மூலம் ஆண்டாண்டு காலமாய் இந்த மண்ணில் உரிமைகளை இழந்த சமூகத்தினர் அந்த உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அதற்கு அந்தச் சமூகத்தினரை அடையாளம் கண்டறிந்து அவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு சான்று வேண்டும். அந்தச் சான்றே சான்றிதழ்.
முற்போக்குத் தளத்தில் தன்னைப் பகுத்தறிவுவாதியாக, அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட கமல்ஹாசனுக்கு இந்தியச் சமூகம் குறித்த வரலாற்றுப் பார்வையும் கிடையாது, நடைமுறைச் சமூகத்தின் சிக்கல்களும் புரியாது என்கிற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நேரடியான சாதி வெறியர்களைக் காட்டிலும், கமல்ஹாசனைப் போன்ற போலி சமத்துவவாதிகள் ஆபத்தானவர்கள். இவர்கள் கொலையாளிகள் அல்ல; தற்கொலையைத் தூண்டுபவர்கள்.
இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல.
மறுக்கப்பட்ட உரிமையின் மறுபங்கீடு என்று கமலஹாசனுக்கு உரக்கச் சொல் பத்மபிரியா.
நன்றி : திராவிடர் சிந்தனையாளர் பேரவை!

கருத்துகள் இல்லை: