வியாழன், 18 மார்ச், 2021

தோழர் மருதையன் : பாசிச எதிரி தமிழகத்தில் அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட கூடாது ! இந்த தேர்தலில் நான் திமுகவுக்கு வாக்களிப்பேன்!

செல்லபுரம் வள்ளியம்மை  :மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொது செயலாளராக ஏறக்குறைய 25  இருந்தவர் தோழர் மருதையன்!
மக்கள் கலை இலக்கிய கழகமானது தேர்தல் அரசியல் நம்பிக்கை அற்ற மாக்சீய அமைப்பாகும்.
தேர்தல் என்பது போலி ஜனநாயகம், மக்கள் புரட்சியின் மூலம்தான் உண்மையான ஜனநாயகத்தை அடைய முடியும் என்பதுதான் ம க இ கவின் கொள்கையாகும்.
ம க இ கவில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக தோழர் மருதையன் அவர்கள் அண்மை காலமாக விலகி இருக்கிறார்!
இந்த நிலையில் நடைபெறும் சட்டமன்ற இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அது ஏன் என்று கூறுகையில், நாம் விரும்புகின்ற புதிய ஜனநாயக புரட்சியை தேர்தல்கள் மூலமாக கொண்டுவர முடியாது என்பது உண்மைதான்.
ஆனால் எல்லா தேர்தல்களை போல அல்ல இப்போது நடைபெற இருக்கும் தேர்தல்!
இப்போது நாம் எதிர்கொள்வது வேறொரு பிரச்சனையை!
இந்த தேர்தலில் வழமை போல அடிமை எடப்பாடி அரசு,  மோடி அரசுக்கு அடிமையாக செயல்படும் எடப்பாடி அரசு மீண்டும் பதவிக்கு வந்தால்,
அது பாரதீய ஜனதா கட்சியே ஆட்சிக்கு வருவதாக பொருள்படும்! அதன் விளைவு எப்படி இருக்கும்?


தமிழகம் என்பது பாரதீய ஜனதாவின் வலையில் சிக்காத ஒரு பகுதியாக இருக்கிறது! (தமிழகம் -கேரளா எல்லாம்).
அவர்கள் என்னென்னமோ எல்லாம் செய்து பார்த்தும் இன்னமும் அவர்களின் வலையில் விழ தமிழகம் மறுக்கிறது.
தமிழகத்தை எப்படி வீழ்த்துவது என்பதுதான் அவர்களுடைய இலக்கு!
இந்தியா முழுவதும் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
2014 இல் மோடி வந்ததில் இருந்து அவர்களது பாசிச நடவடிக்கைகள் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம்
இப்போ அரசு அதிகாரத்திற்கு அவர்கள் வந்துவிட்டால் இங்கே நடக்கக்கூடியது என்ன,
என்ற கவலையில் இருந்துதான் இந்த சட்டமன்ற தேர்தலை நாம் அணுகவேண்டும்
ம க இ க மட்டுமல்ல வேறு சில பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு கூட திமுக என்று நாங்கள் சொல்ல முடியாது என்று விலகி நிற்கிறார்கள்.
அது பெரிய தவறு என்று கருதுகிறேன் .
நாம் எதை செய்ய முடியாதோ அதை செய்யுங்கள் என்று மக்களுக்கு சொல்லும் உரிமை நமக்கு கிடையாது.
நாங்க ஒட்டு போடமாட்டோம் . அல்லது திமுகவுக்கு ஒட்டு போடமாட்டோம் ,
நீங்க பார்த்து .. உங்களுக்கே தெரியும் என்று பேசுவது ஒரு சந்தர்ப்பவாதம் !
மக்களை விட தங்களை ஒரு மேலானவர்களாக கருதி கொள்வது ஒரு பார்ப்பனீய மேட்டிமைத்தனம்தான்.
திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஏன் ஒட்டு போட சொல்கிறீர்கள் என்றால் அதுதான் தவிர்க்க முடியாத மாற்றாக இன்றைக்கு இருக்கிறது.
நீங்களோ நானோ அல்லது இன்னொரு கட்சியோ மாற்றாக இன்றைக்கு இல்லை!
தன்னுடைய எதிரி என்று பாரதீய ஜனதா கட்சி மீண்டும் மீண்டும் அவர்களைத்தான் அறிவித்திருக்கிறான்.
தோழர் மருதையனின் விரிவான பேட்டியின் முன்னுரை மட்டும்தான் இது முழு விரிவான பேட்டியும் இந்த காணொளியில் உள்ளது பாருங்கள் !                

கருத்துகள் இல்லை: