வியாழன், 18 மார்ச், 2021

மம்தாவின் தேர்தல் அறிக்கை :மாதம் ரூ.1000 உதவித்தொகை, ரூ.5 சாப்பாடு, ஏக்கருக்கு ரூ.10,000 !

puthiyathalaimurai.com : மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மம்தா பானர்ஜியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்கள்…
  • மேற்குவஙக மாநிலத்தில் புதிதாக 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் .
  • ஏழைகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • மாநிலத்தின் 1.6 கோடி குடும்பத்திற்கும் குறைந்த பட்ச வருமானமாக மாதம் 500 (பொதுப்பிரிவினர்) மற்றும் 1000 (எஸ்சி/எஸ்டி/ஓபிசி) ரூபாய் வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியில் 10 இலட்ச ரூபாய்க்கான கடன் அட்டை வழங்கப்படும்.
  • கர்ப்பிணி பெண்களுக்கு 731 நாட்கள் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்.சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
  • ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.
  • 2500 ‘மா’ கேண்டீன்கள் மூலமாக 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும்.
  • அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை: