புதன், 17 மார்ச், 2021

பார்ப்பனீயம் தமிழகத்தில் பெறாத வெற்றியை ஈழத்தில் பெற்றுள்ளது?

 செல்லபுரம் வள்ளியம்மை : கலைஞர் திமுக பெரியார் திராவிட கருத்தியல் என்று வரும்பொழுது ஈழத்தமிழர்கள் தமிழக பார்ப்பனர்களின் கண்களால்தான் அவற்றை பார்க்கிறார்கள்  
பார்ப்பனர்களுக்கு எதை பிடிக்குமோ அவை இவர்களுக்கும் பிடிக்கும்
பார்ப்பனியத்திற்கு எது எதிரியாக தெரியுமோ அதுவே இவர்களுக்கும் எதிரியாக தெரியும்  
இந்த சிந்தனை போக்கை கட்டமைத்தது தமிழக பார்ப்பனீயம் .
அது இன்னும் இவர்களுக்கு தெரியவில்லை . தங்களின் சிந்தனை போக்கை பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றுகூட இவர்களுக்கு இன்னும் தோன்றவில்லை
இலங்கை ஜாதீயம் என்பது தமிழக பார்ப்பனீயம் பெற்ற திருட்டு குழந்தை என்றுதான் கூறவேண்டி இருக்கிறது  
தமிழகத்தில் ஒண்ணரை பார்ப்பனர்கள் என்ற சொல்லாடல்  பார்ப்பனர்களை விட மோசமான பார்ப்பனீய சிந்தனை உடையவர்களை குறிக்கிறது  
இலங்கையில் கடந்த சுமார் எழுபது வருடங்களாக கோலோச்சிய தமிழ் பத்திரிகை ஆசிரியர்களின் பூர்வீகம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது  இந்த பத்திரிகை ஆசிரியர்கள் முதலாளிகள் எல்லாம் தமிழக பாப்பனீயர்கள்தான்  இவர்களில் சிலர் பார்ப்பனர்கள் அல்லர் ஆனாலும் அவர்கள் தமிழக பார்ப்பனீய கருத்துக்களை கொண்ட நாடார்களும் செட்டியார்களுமாவார்


இது பற்றிய போதிய தரவுகளை இந்த இணைப்பில் உள்ள கட்டுரை ஓரளவு தருகிறது  

ஈழத்தில் பெரியாரையும் திராவிட கருத்தியலையும் இருட்டடிப்பு செய்த (தமிழகம்) பார்ப்பன பத்திரிகையாளர்கள்

ஸ்ரீ நிவாச அய்யங்கார்
ஹரன் அய்யர்
மகேஸ்வர சர்மா
பெரியாரையும் திராவிட கருத்தியலையும் ஈழத்தில் இருட்டடிப்பு செய்தவரகள் மூன்று பார்ப்பனர்கள் .
1960- 70 களில் ஈழத்து முக்கிய 3 தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களாக இவர்கள் இருந்தார்கள் 
வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ நிவாசன் அய்யங்கார் (இந்து பத்திரிகையின் கஸ்தூரி ரங்கன் குடும்ப சம்பந்தி),
மகேஸ்வர சர்மா,- இவர் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக இருந்தார் ..மபொசியை ஈழத்துக்கு கூட்டி வந்து அறிமுக படுத்தியவர்.
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர்காக இருந்தவர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யர் .இவர் திருவையாறு வைதீக பார்ப்பனராகும்
மூன்று இலங்கை பத்திரிகையாளர்கள் ..
இவரகள் எக்காரணம் கொண்டும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பெரியார் பற்றியோ திராவிட கருத்தியல் பற்றியோ அறிந்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல் பட்டுள்ளனர்,
குறிப்பாக மதங்கள் சார்ந்த தமிழ் தேசியத்தை இவர்கள் திட்டமிட்டு கட்டி எழுப்பினார்கள்
தமிழக மதப்பிரசாரகர்கள் பற்றி தாரளமாக எழுதுவார்கள் .
இந்த மூன்று பத்திரிகைகளும்தான் இலங்கை தமிழர்களின் சிந்தனை போக்கை தீர்மானித்த பத்திரிகைகள் .
பார்ப்பனீயம் எவ்வளவும் மோசமாக மக்களை தவறாக வழி நடத்திவிடும் என்பதற்கு இந்த மூன்று பத்திரிகைகளின் வரலாறே சிறந்த உதாரணம்.
இன்னும் சரியாக கூறேவேண்டும் என்றால் : தமிழகத்தில் தினமணியும் தினமலரும் துக்ளக்கும் மட்டுமே பத்திரிகைகளாக இருந்தால் தமிழக மக்களை எப்படிப்பட்ட இருட்டில் தள்ளி இருப்பார்கள்? இது போன்ற ஒரு நிலைதான் இலங்கை தமிழர்களுக்கு நடந்தது.

இவர்களின் பாதிப்பில் இருந்து இன்னும் அவர்கள் விடுபட விடவில்லை. 

காஞ்சி சங்கரன் , கி வா ஜெகனாதான், ராஜகோபாலச்சாரி , போன்றவர்கள் மட்டுமல்லாமல் வடஇந்திய தலைவர்கள் பற்றியும் அடிக்கடி எழுதுவார்கள்.

ஆனால் பெரியார் கோட்பாடுகளோ திராவிட கருதியலோ ஈழத்தமிழர்களுக்கு தெரிந்து விடகூடாது என்பதில் மிகவும் கபடத்தோடு நடந்து கொண்டனர்,
பின்பு வந்த பத்திரிக்கை ஆசிரியர்களும் இவர்களையே தங்கள் குரு போன்று பின் தொடர்ந்தனர் ,
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர்காக இருந்த கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு அனுபவங்களைப் பெற்றவர். முதல் 10 ஆண்டுகள் சென்னையில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும், பின்னர் இலங்கையில் வீரகேசரியில் (1939-1959) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும், ஈழநாட்டில் (1959-1979) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும் எனத் தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் மருத்துவர் சண்முகரத்தினம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதம ஆசிரியர் இவரேயாவார்.

வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" "கே.பி.எச்" என்ற பெயர்களில் எழுதியுள்ளார்.
ஈழத்தில் இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.

வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். திருச்சி புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். 15 வயதிலேயே இவரது கத்திச் சங்கம் என்ற சிறுகதை சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. பாப்புலர் மேகசீன் (Popular Magazine) என்ற இதழையும் நடத்தினார்[1].
இலங்கை வருகை
1930 ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து 1942 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார். வீரகேசரி பத்திரிகையின் நிருபராக, உதவி ஆசிரியராக, ஆசிரியராக, பின் 1953 ஆம் ஆண்டில் பிரதம ஆசிரியராகப் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், மற்றும் சமூகப் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார்.
எழுத்தாளராக
வீரகேசரி பத்திரிகையில் குந்தளப் பிரேமா (1951), நந்தினி, தாரிணி, பத்மினி, ஆஷா, சிவந்தி மலைச்சாரலிலே, அஞ்சாதே அஞ்சுகமே போன்ற பல துப்பறியும் புதினத் தொடர்களை ரஜனி, வால்மீகி ஆகிய புனைபெயர்களில் எழுதினார். பல ஆன்மீகக் கதைகளும் எழுதினார். இவரது தொடர்கதைகள் பல அக்காலத்திலே வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தன. ஈழத்தின் கதை என்ற பெயரில் இலங்கையின் வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். இத்தொடரை 2008 ஆம் ஆண்டில் அவரது மகன் கே. வி. எஸ். மோகன் (கதம்பம் மோகன்) நூலாக வெளியிட்டார்.
சென்னை த இந்து பத்திரிகைக்கும் மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கும் 32 ஆண்டுகாலம் இலங்கை நிருபராகப் பணியாற்றினார். கல்கி வார இதழில் இலங்கைக் கடிதம் என்ற தலைப்பில் வாராந்தம் இலங்கைச் செய்திகளை வெளியிட்டார்[2].
1975 ஆம் ஆண்டில் வாஸ் பத்திரிகை ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவர் தொடர்ந்து 1988இல் இறக்கும்வரை பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மகேஸ்வர சர்மா, (மார்ச் 22 1938 - சூலை 4 1992) ஈழத் தமிழ் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். சுதந்திரன் வாரப் பத்திரிகை, மற்றும் சுடர் மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் மகேஸ்வரசர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக் குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார்.

 வேறு பல பத்திரிகைகள் இருந்தாலும் இவை மூன்றுமே பொதுமக்களின் வாழ்வியலில் முக்கிய பாகம் வகித்திருந்தன.
இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் குடும்ப நிறுவனமாக இருந்த 
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையும்  பெரிய வாசகர்களை கொண்டிருந்தது  .
அது முழுக்க முழுக்க அந்த நிறுவனத்தின் daily news , Observer மற்றும் அந்நிறுவனத்தின் சிங்கள பத்திரிகைகளின் செய்திகள் கட்டுரைகளை ஒட்டியே இருந்தது.
நிறுவனத்தின் விளம்பரங்கள் விநியோக கட்டுமானம் போன்றவற்றின் பக்கபலத்தால் மட்டுமே அறியப்பட்டு இருந்தது.

 

கருத்துகள் இல்லை: