சனி, 20 மார்ச், 2021

அதிமுக-திமுக வேட்பாளர்கள் 131 தொகுதிகளில் “நேருக்கு நேர்” போட்டி

அதிமுக-திமுக வேட்பாளர்கள் 131 தொகுதிகளில் “நேருக்கு நேர்” போட்டி

maalaimalar :சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டிருந்தாலும் அ.திமு.க. தலைமையிலான அணியும், தி.மு.க. தலைமையிலான அணியும் ஆட்சி யாருக்கு என்று மல்லு கட்டுகின்றன.              இரு அணிகளுமே தொகுதிகளில் கள நிலவரங்களை ஆராய்ந்தே தொகுதிகளை தேர்வு செய்து வேட்பாளர்களையும் களம் இறக்கி உள்ளது.                அனைத்து வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்து விட்டனர். 131 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேருக்கு நேர் மோதுகின்றன.                       தி.மு.க.வும், பா.ம.க.வும் 18 தொகுதிகளில் நேருக்கு நேர் சந்திக்கின்றன. 14 தொகுதிகளில் தி.மு.க.வுடன் பா.ஜனதா மோதுகிறது. காங்கிரஸ் 15 தொகுதிகளில் அ.தி.மு.க.வுடனும், 5 தொகுதிகளில் பா.ஜனதாவுடனும், 2 தொகுதிகளில் த.மா.கா.வுடனும் மோதுகிறது.                           அ.தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 5 தொகுதிகளில் மோதுகின்றன. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் ஒரு தொகுதியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.

கருத்துகள் இல்லை: