திங்கள், 15 மார்ச், 2021

சீனாவில் மஞ்சள் புழுதி! மொத்தமாக மஞ்சளாக மாறிய சீனா தலைநகர்!

 Shyamsundar - tamil.oneindia.com : பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் முழுக்க புழுதி சூழ்ந்து இன்று காலை மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் இருக்கும் கோபி பாலைவனத்தில் எல்லா வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் புயல் ஏற்படும். புழுதி புயல் ஏற்பட்டு அங்கிருந்து மணல் காற்று ஊருக்குள் வருகிறது.
சீனாவின் வடகிழக்கு பகுதிகளிலும், வடமேற்கு பகுதியிலும் இந்த புயல்கள் அதிகம் ஏற்படும். அதே சமயம் மங்கோலியா பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்படும்
மரங்கள் வெட்டப்படுவதாலும் , அதீத வெப்பநிலை காரணமாகவும் மங்கோலியாவில் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்படும். இந்த நிலையில் இந்த பாலைவன புயல் மற்றும் காட்டுத்தீ மூலம் ஏற்பட்ட காற்று எல்லாம் ஒன்றாக சேர்ந்து சீனாவில் மணல் மற்றும் புழுதி புயலாக மாறியுள்ளது. சீனா முழுக்க பல மாகாணங்களை இந்த புயல் ஆக்கிரமித்துள்ளது.



புயல் இதனால் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தற்போது மொத்தமாக மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளது. காலையில் விடிந்ததும் வீட்டை விட்டு வெளியே வந்த மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
மொத்தமாக வானமும் முழுக்க இளஞ்சிவப்பு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் மாறியது.
மஞ்சள் மணல் புயல் முழுக்க முழுக்க புழுதிகள் அதிகம் இருப்பதால் காற்று மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளது.
இதனால் பெய்ஜிங்கில் காற்றின் தரம் 500 என்ற மோசமான புள்ளியை தொட்டுள்ளது. இது சுவாசிப்பதற்கு ஏற்ற காற்று கிடையாது என்பதால் சீனாவில் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றில் 300 மைக்ரோ கிராம் அளவு துகள்கள் உள்ளது. பொதுவாக சீனாவின் காற்றில் 35 மைக்ரோ கிராமிற்குதான் துகள்கள் இருக்கும்.
ஆனால் இப்போது 300 மைக்ரோ கிராம் வரை துகள்கள் காணப்படுகிறது.
மாஸ்க் இது நுரையீரல் பகுதிகளை கிழிக்கும் அளவிற்கு வலிமையானது. இதை அப்படியே சுவாசித்தால் மரணம் கூட ஏற்படும்.
இதனால் அங்கு மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டள்ளது.இது தொடர்பாக இணையத்தில் வெளியாகும் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளன,

கருத்துகள் இல்லை: