திங்கள், 15 மார்ச், 2021

சரத்பவார் : தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் பாஜக தோல்வி அடையும்

.dailythanthi.com  : மும்பை,   தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அசாம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை தழுவும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளாா்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மக்கள் முடிவுகளை எடுப்பார்கள் என்பதால் தேர்தல் முடிவு குறித்து இப்போது கூறுவது தவறானதாகும்.
கேரளாவை பொறுத்தவரை நாங்கள் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளோம்.
அங்கு நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.
தமிழ்நாட்டில் மக்கள் தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தருவார்கள். தேர்தலுக்கு பிறகு அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். மேற்கு வங்கத்தில் பா.ஜனதா மம்தா பானர்ஜியை தாக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.

பெங்காலின் பெருமை மற்றும் சுய மரியாதை சம்மந்தப்பட்டது என்பதால் ஒட்டு மொத்த மாநிலமும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் உள்ளது. மம்தா பானர்ஜியின் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அசாமில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. எனது கட்சியினர் கொடுத்த தகவலின்படி அசாமில் பா.ஜனதா வலுவாக உள்ளதாக தெரிகிறது. அதிகபட்சம் அசாமில் மட்டும் பா.ஜனதா ஆட்சியை தக்கவைக்கும். மற்ற மாநிலங்களில் தோல்வியை சந்திக்கும். மற்ற கட்சிகளே அங்கு ஆட்சியை பிடிக்கும். இது நாட்டை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்லும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல 12 எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அரசியல் அமைப்பை பின்பற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை: