திங்கள், 7 செப்டம்பர், 2020

கலைஞர் முதலமைச்சராக இருக்கும் வரை ஜெயேந்திரருக்கு வாதாட கடவுளே வந்தாலும் .. ராம் ஜெத்மலானி

"இன்று வெளிவந்த கருணாநிதியின் அறிக்கையில் அனைத்து,_ #தகவல்களையும் கொட்டி விட்டார், இதற்கு மேல் மூடி மறைக்க எந்த பிரயோஜனமும் இல்லை எனவே அவரை உடனடியாக கைது செய்யுங்கள் என்று சற்று கோபமாக கூறுகிறார் ஜெயலலிதா! . 

Sivakumar Nagarajan : ·  ராம் ஜெத்மலானி.., சற்று பின்னோக்கி செல்லலாம் காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சங்கரராமன். 2004ம் ஆண்டு பட்டப்பகலில் கோவில் உள்ளேயே கூலிப்படை சிலரால் வெட்டி கொலை செய்யப்படுகிறார்.... தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது... அத்தனை அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.... ஆட்சியில் இருந்த #ஜெயலலிதா ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கிறார்... அந்த ஒரு நபர் விசாரணை கமிஷன் தனது அறிக்கையை ஒரே வாரத்தில் தாக்கல் செய்தது அறிக்கையை படித்து பார்த்து ஜெயலலிதா அதிர்ச்சியாகிறார்... அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த முடிவுக்கும் வராமல் அமைதி காக்கிறார்.....ிஷயம் கலைஞருக்கு செல்கிறது தனக்கு தெரிந்த ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை நேரில் அழைக்கிறார்.... 

உடனடியாக காஞ்சிபுரம் சென்று யாருக்கும் தெரியாமல் இந்த கொலைக்கான பின்னணியில் முழு விவரங்களையும் எனக்குத் தாருங்கள் என்று ரகசியமாக சொல்லி அனுப்புகிறார்.  காஞ்சிபுரம் சென்ற அந்த அதிகாரி நான்கு நாட்கள் தங்கி இருந்து முழு விவரங்களையும் திரட்டிக்கொண்டு, ஒரு அறிக்கையாக கலைஞரிடம் தருகிறார் அந்த அறிக்கையை படித்து பார்த்த கலைஞருக்கு பேரதிர்ச்சி ..

மறுநாள் கலைஞரிடம் இருந்து அனல் கக்கும் அறிக்கை ஒன்று வெளியாகிறது... காஞ்சிபுரத்தில் நடந்த கொலைக்கான முழு விவரங்கள் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டன அம்மையார் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது நம் அனைவருக்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அந்த அறிக்கையின் மீது இன்னும் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமுக மாபெரும் போராட்டம் நடத்தும் என்று கூறுகிறார்.... இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜெ கலைஞருடைய அறிக்கையை முழுமையாக படித்துவிட்டு,  கலைஞருக்கு தெரிந்த ஒரு விஷயத்தை இனி மூடி மறைப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒரு முடிவுக்கு வருகிறார்.

(கலைஞர் விடுத்த அறிக்கையில் ஒரு இடத்தில் கூட குற்றவாளியின் பெயரை வெளிப்படையாக கூறவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்)

காவல்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்த #ஜெ காஞ்சி பீடாதிபதி,#ஜெயேந்திரரை உடனடியாக கைது செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார்.... வந்திருந்த அதிகாரிகள் அவர் செய்திருக்க மாட்டார் கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள் என்று பவ்யமாக கேட்க,,, "இன்று வெளிவந்த கருணாநிதியின் அறிக்கையில் அனைத்து,_ #தகவல்களையும் கொட்டி விட்டார், இதற்கு மேல் மூடி மறைக்க எந்த பிரயோஜனமும் இல்லை எனவே அவரை உடனடியாக கைது செய்யுங்கள் என்று சற்று கோபமாக கூறுகிறார்.

ஹைதராபாத்திலிருந்து ஜெயந்திரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.,
ஆண்டுகள் உருண்டோடி கிறது.

2006 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் முதல்வராகிறார்.... சங்கர்ராமன் கொலை வழக்கு முன்னைவிட எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது தீர்ப்பு நாள் நெருங்கி வருகிறது...

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஜெயந்திரருக்காக வாதாடுவதற்கு அழைத்து வரப்படுகிறார் 4 மணி நேரம் தன்னுடைய மொத்த, #திறமைகளையும் வாதமாக எடுத்து வைக்கிறார் அத்தனை வாதங்களையும் கேட்ட நீதிபதி அனைத்தையும் தள்ளுபடி செய்கிறார்.

தன்னுடைய வாதத் திறமை இங்கு எடுபடவில்லை என்பதை புரிந்துகொண்ட #ஜெத்மலானி டெல்லி புறப்படுகிறார்...

விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், #கலைஞர் முதலமைச்சராக இருக்கும் வரை ஜெயேந்திரருக்கு வாதாட அந்த, #கடவுளே வந்தாலும் அவர் விடுதலையாக மாட்டார் என்று ஒரே வரியில் முடித்துக் கொள்கிறார்.

இதுபற்றி கலைஞரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சொன்ன ஒரே வாசகம் ! #நெற்றிக்கண்திறப்பினும்குற்றம்குற்றமே, #கலைஞர்-ன சும்மாவா..!

#Credit : Sri SRK

கருத்துகள் இல்லை: