
பேலியோ டயட் இருப்போரை டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். 44 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் 'ஐரோப்பியன் ஜர்னல் ஆப் நியூட்ரிசியன்' வெளியிட்டுள்ளது.
அதில், பேலியோ டயட் இருப்போரை ஆய்வு செய்ததில், அவர்களின் ரத்தத்தில் இதயத்தை பாதிக்கும் உயிரிகள் இருந்துள்ளன. டிரைமெதிலமைன் ஆக்சிஜன் அளவு அதிகமாக இருந்துள்ளது. அவை குடல் பாக்டீரியாக்களை தாக்குகிறது. இதனால், இதய நோய்கள் உண்டாகின்றன.
பேலியோ டயட்டில் இறைச்சிகள், பச்சை காய்கறிகள், நட்ஸ், குறைந்த அளவிலான பழங்கள் மட்டுமே சாப்பிட்டும், தானிய வகைகள், பால் வகைகள், உப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பது தான் பேலியோ டயட்டின் கட்டுப்பாடுகள் ஆகும். இது தான் முக்கிய பிரச்னை என ஆய்வை மேற்கொண்ட ஏஞ்சலா ஜினோனி என்ற டாக்டர் கூறியுள்ளார். பேலியோ டயட்டில், தானிய உணவுகளளை முற்றிலும் தவிர்க்கப்படுவதால் தான் டிரைமெதிலமைன் ஆக்சிஜன் அதிகளவு சுரப்பதற்கு காரணம் என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக