டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க துணை ஆளுநர் நஜீப்பை நேரில்
சந்தித்து உரிமை கோரியுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த்
கெஜ்ரிவால். வரும் 26-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநிலத்தின்
முதல்வராக பதவியேற்க உள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைத்தபோதும் ஆட்சி அமைக்க
பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லை. 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி
அமைக்க 8 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி முன்வந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக
ஆம் ஆத்மி கட்சி, மக்களிடத்தில் கருத்து கணிப்பை மேற்கொண்டது. இதில் 80%
பேர் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரியது ஆம் ஆத்மி! 26-ல் கெஜ்ரிவால்
பதவியேற்பு!!
இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்
குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம்
பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க
முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.
பின்னர் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப்பை அவரது இல்லத்தில் தமது ஆதரவு
எம்.எல்.ஏக்களுடன் நேரில் சென்று கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது
டெல்லியில் ஆட்சி அமைக்க கெஜ்ரிவால் உரிமை கோரினார்.
பதவியேற்பு எப்போது?
ஆளுநரின் அதிகாரப்பூர்வ அழைப்பைத் தொடர்ந்து டெல்லியில் வரும் 26-ந்
தேதியன்று முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக