ஜெ.சி.டேனியல் - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு! ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய
பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம்
அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது. சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார். இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.
திரைப்படத்தில்
கதாநாயகி நாயர் சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை எப்படி உயர்ந்த சமூகத்தை சேர்ந்த
பெண்ணாக நடிக்க வைக்கலாம் எனக் கூறி அப்போதிருந்த ஆதிக்க சமூகத்தினர் இந்த
திரைப்படத்தை திரையிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். மூன்று காட்சிகள்
மட்டுமே திரையிடப்பட்ட அந்த படத்தை தயாரித்த ஜெ.சி.டேனியல் தன் சொத்துக்கள்
பறிபோனதால் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த படத்தின் பிரதிகள்
எரிக்கப்பட்டதால், மலையாளத்தின் முதல் சினிமாவை எடுத்தவர் ஜெ.சி.டேனியல்
என்ற பதிவு இல்லமலே போனது. அவர் தமிழர் என்ற காரணத்தால் ஜெ.சி.டேனியலுக்கு
சேரவேண்டிய மரியாதையை கேரள அரசாங்கம் கொடுக்க மறுத்தது.
இந்த
உண்மையை தெரிந்துகொண்ட ஒரு பத்திரிக்கையாளர் எடுத்த முயற்சியால், இப்போது
கேரள அரசாங்கம் ஜெ.சி.டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக
ஏற்றுக்கொண்டுள்ளது. ஜெ.சி.டேனியல் பெயரில் வருடம் ஒருமுறை விருதும்
வழங்கப்படுகிறது.
படம்
எடுப்பதற்காக ஜெ.சி.டேனியல் எடுத்த முயற்சிகளையும், படம் எடுத்த பின்னர்
அவர் பட்ட துன்பங்களையும் தான் வெள்ளித்திரையில் விளக்குகிறது
பிருத்விராஜ், மம்தா உட்பட பலர் நடித்திருக்கும் ஜெ.சி.டேனியல் திரைப்படம்.
மலையாளத்தில் ரிலீஸாகி 7 மாநில அளவிலான விருதுகளை வென்ற இத்திரைப்படத்தை
தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்<
இத்திரைப்படத்தில்
இடம்பெறும் ’காற்றே காற்றே’, ’அம்மாடி நான்’ என்கிற பாடல்கள் மலையாளத்தில்
மாபெரும் வெற்றிபெற்றதோடு தமிழிலும் பல ரசிகர்களை கவந்துள்ளது.cinema.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக