சென்னை, டிச.28–
வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடந்தது.
வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா எம்.பி. தலைமை தாங்கினார். அவைத்தலைவர் மதுசூதனன், சென்னை மேயர் சைதை துரைசாமி, பேச்சாளர்கள் நடிகர் ராமராஜன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, நடிகர் குண்டு கல்யாணம், தியாகு மற்றும் சிந்தை ஆறுமுகம் ஆகியோர் பேசினார்கள்.
பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சியால் கடுமையான பொருளாதார நெருக்கடி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால் விலைவாசி உயர்ந்தது. விலைவாசி உயர்ந்தாலும் ஏழை–எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதன் மூலம் பாதுகாத்தார். பன்னீரு சொந்தமாக சிறிய டீக்கடை வைத்து தானே டீ ஆத்திகொண்டிருந்தார் . இந்த பன்னீரை சி எம் ஆக்கியது ஜெயலலிதாவே , அதனால் பன்னீரு உண்மையே சொல்லுதே
இலவச அரிசி, பசுமை வீடுகள், மாணவர்களுக்கு லேப்–டாப் போன்ற திட்டங்கள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டனர்.
கல்விக்கு மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். மக்களுடைய வரிப்பணம் மக்களுக்கே போய் சேர வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்களை புரட்சித்தலைவி செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் உற்றுநோக்கி பார்க்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்றபோது 16 லட்சம் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இருந்தனர்.
அவரது பாதையில் புரட்சித்தலைவி திறம்பட கட்சியை செயல்படுத்தி வருகிறார். இன்று ஒன்றரை கோடி உறுப்பினர்கள் அ.தி.மு.க.வில் உள்ளனர். அ.தி.மு.க. தொண்டன் என்று சொல்வதில் எல்லோரும் பெருமை அடைகிறோம்.
தமிழர்களின் உரிமையை பெறுவதில் புரட்சித்தலைவி காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு, இலங்கை தமிழர்கள் பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் தமிழர்களின் உரிமையை பெறுவதில் புரட்சித் தலைவியை விட சிறந்த தலைவர் யாருமில்லை. இதனை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
எனவே பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்து புரட்சித்தலைவியை பிரதமராக்குவோம். அவரை டெல்லி செங்கோட்டைக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் நீலகண்டன், பழ.கருப்பையா, நிர்வாகிகள் கிரிநாத், குமாரி நாராயணன், ரவீந்திரஜெயின், வள்ளி, இருசப்பன், மகிழன்பன், சுகுமார், ராமஜெயம், ஆமீம், இரா.வீரமணி, பீமாராவ், கோபால், தங்கபாண்டியன், ஆவின் அருள், குப்பன், துறைமுகம் இன்பநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக