இந்தியா இல்லாமல் அங்கோர் இல்லை ஆனால் அங்கோர் இந்திய நகரமன்று
ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ராஜராஜசோழன் கட்டிய தஞ்ஞை பெருங்கோயில், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஆட்சி பல்லவ மன்னர்கள் கட்டிய மாமல்லபுரம் என்பன சேர்க்கப்படவில்லை. நூலாசிரியரின் குறிப்பில் கிறிஸ்துவுக்கு முந்திய காலத்து பழைமை சின்னங்கள், அகழ்வாராய்ச்சி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால் தமிழகத்தில் இருக்கும் கிறிஸ்துவுக்கு முந்திய அகழ்வாராய்ச்சி இடங்கள் ஏனோ சேர்க்கப்படவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களுக்கு வரலாறும்,
பண்பாடும், இலக்கியமும் இருந்த போதும் Legendary Sites of The Ancient
World என்ற (பண்டைய உலகின் பழங்காலச் சின்னங்கள்) புத்தகத்தில்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹரப்பா (Harappa) மேற்கு
பாகிஸ்தானிலுள்ள மொஹர்கரா (Mehrgrah) இந்தியாவில் கங்கை
நதியோரத்தில் உள்ள பாடலிபுத்ரா (Pataliputhra) வடக்கு பாகிஸ்தானில்
உள்ள டெக்ஸிலா (Texila) ஆகியவற்றின் விபரங்கள் மட்டுமே இந்திய
உபகண்டத்தில் இருந்து சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ராஜராஜசோழன் கட்டிய தஞ்ஞை பெருங்கோயில், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஆட்சி பல்லவ மன்னர்கள் கட்டிய மாமல்லபுரம் என்பன சேர்க்கப்படவில்லை. நூலாசிரியரின் குறிப்பில் கிறிஸ்துவுக்கு முந்திய காலத்து பழைமை சின்னங்கள், அகழ்வாராய்ச்சி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால் தமிழகத்தில் இருக்கும் கிறிஸ்துவுக்கு முந்திய அகழ்வாராய்ச்சி இடங்கள் ஏனோ சேர்க்கப்படவில்லை.
அதே நேரத்தில் கி. பி. 1113க்கு மேல் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் குறித்த தகவல்கள் நூலில் இருக்கின்றன.
9ஆம் நூற்றாண்டு தொடக்கம் 16 ஆம் நூற்றாண்டோடு நிறைவுக்கு வந்த கெமர்
மன்னர்களின் ஆட்சியால் புதருக்குள் மறைந்து கிடந்த அங்கோர்வாட்டை
வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் பிரெஞ்சு கிறிஸ்தவ மிஷனரி பாதர்
செவ்ரூல் (1668 Chevereul) ஆவார்.
ஆனாலும் அது வெளி உலகிற்கு முழுமையாக தெரிய வந்தது 1850இல்.
இன்னொரு பிரெஞ்சு பாதிரியார் சார்ள்ஸ் எமிலி பொயூலிவக்ஸ் (Charles Emille
Boullevaux) தஞ்ஞை பெருங்கோயில்,என்பவரால். இவர்கள் இருவரால் அங்கோர்வாட் மேலை உலகில்
அறியப்பட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் கவனத்திற்குப்
போயிருக்கிறது. அதன் அடையாளமே அந்த நூல்.
அந்த நூலில் அங்கோர்ட்வாட் இடம்பெற்றதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் தமிழகத் தின் பழங்கால கோயில்கள், சின்னங்கள் ஏன்
இடம்பெறவில்லை என்பதுதான் என் கேள்வி. ஆனால் இந்தக் கேள்விக்கு ஏதோ
ஒரு வகையில் பதிலாக அங்கோர் வாட் இருக்கின்றது. எப்படி?
கம்போடியாவில் உருவான கெமர் மன்னர்களின் பின்னணியில் தமிழகம்
இருந்திருக்கிறது. இது எனது யூகமன்று. ஆய்வாளர்களின் கருத்து
Angkor Splendors of The Khmer civilization என்ற புத்தகத்தில் அங் கோரை
ஆண்ட மன்னர்களின் வரலாறு தெளிவாகத் தரப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை Marilia Albanese என்ற இத்தாலியப் பெண்மணி
எழுதியிருக்கிறார். இவர் சமஸ்கிருத மொழியில் பட்டப்படிப்பும்
இந்தியிலும் இந்தியப் பண்பாட்டில் அடையாள பட்டமும் பெற்றவர்.
இத்தாலிய ஆபிரிக்க கல்வி நிறுவனத்தின் இயக்குநர். அவர் தனது நூலில்
கம்போடியாவின் கெமர் மன்னர்கள் யார்? அவர்களின் மூதாதையர் எவர்?
என்பதை மறைக்காமல் எழுதியிருக்கிறார்.
கம்போடியாவில் இந்தியா இல்லாமல் அங்கோர்வாட் கட்டியிருக்க
முடியாது. ஆனால் அங்கோர்வாட் இந்திய நகரமன்று. அது புராதன பாரிஸை விட
ரோமன் நகரை விட மேலானது. இப்படி எழுதியவர் ஒரு வெள்ளைக்கார
ஆய்வாளர். கம்போடியாவிற்கு இந்தியத் தொடர்பு குடியேற்ற நோக்கத்தோடோ
படையெடுப்பாலோ ஏற்படவில்லை. இந்திய வர்த்தகர்களால் ஏற்பட்டது.
வியட்நாமில் சீனர்கள் மக்கள் குடியேற்றத்தையும் கலாசாரத்தையும்
திணித்தது போல் இந்தியா கம்போடியாவில் எதையும் செய்யவில்லை. ஆனால்
சமஸ்கிருதம் மூலமாக கம்போடியர்களின் எழுத்து மொழிக்கு
வடிவங்களைக் கொடுத்தது இந்தியாதான்.
இந்தியா என்றால் அன்று பல மன்னர்களைக் கொண்ட நிலப்பரப்பு. அப்படியானால் எந்த மன்னர் வடநாட்டு மன்னரா? தென் நாட்டு மன்னரா
? சரியான விடை தென் நாட்டு மன்னர். அதுவும் 3ஆம் நூற்றாண்டில் தமிழ்
நாட்டில் ஆட்சி செய்த பல்லவ மன்னன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை
திறைசெலுத்த வைத்து தமிழகம் முழுவதையும் ஆட்சிக்குள் வைத்ததோடு
வடநாட்டையும் வென்று கப்பல் படை வைத்திருந்தான் அவர்கள் வழிவந்த ஒரு
இளவரசன். கடல் வழியே கம்போடியா போயிருக்கலாம். சீனர்களின்
வரலாற்றுக் குறிப்புக்களும் அதைத் தான் சொல்கின்றன.
இதற்கு ஒரு கதை கெமர் வரலாற்றில் உண்டு. கி. பி. 3ஆம் நூற்றாண்டில்
இந்தியாவின் தென்பகுதியில் அப்போது புகழ் பெற்ற ஒரு பேரரசின் இந்து
இளைஞன் கடல் வழியே கம்போடியா வந்தபோது நாகாஸ் என்ற அரசனின் மகள்
அவனைப் பார்த்ததும் அவன் கம்பீரத்தில் மயங்கி சிறிய படகில் ஏறி அவனைச்
சந்திக்க முயன்றாள். ஆனால் இளவரசன் தன் மாய வில்லால் அம்பெய்தி
இளவரசியின் படகைத் தாக்கினான்.
அந்தத் தாக்குதலால் கவரப்பட்ட இளவரசி அவனை மணக்க விரும்பினாள்.
இதனையறிந்த இளவரசியின் தந்தை டிராகன் மன்னன் (Dragon King) இந்திய
இளவரசனுக்கு மகளைத் திருமணம் செய்வித்தான். பிறகு நீர்
நிரம்பியிருந்த பெரிய தரையின் நீரைக்குடித்து வெறுந்தரையைத்
திருமணப் பரிசாகக் கொடுத்தான்.
இந்திய இளவரசனின் பெயர் கெளடின்யா (Kawdinya) அவன் மணந்த
இளவரசியின் பெயர் சோமா. (இன்றும் கம்போடியாவில் சோமா என்ற பெயர்
பெண்களுக்கு உண்டு.) அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து
பெரியவன் ஆனதும் தந்தையின் துணையோடு பல்லவர்களின் அனுசரணையோடு
புனன் (Funan மலையரசன்) என்ற அரசை நிறுவி சந்திரவம்சம் என்ற பெயரில்
வைஷ்ணவ வழிபாட்டில் விஷ்ணு, கிருஷ்ணா ஆகிய தெய்வங்களை
அறிமுகப்படுத்தினான். 5ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து வந்த
இரண்டாவது கெளடின்யா என்பவன் புனன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
அப்சரப்பெண்களின் தோற்றமும் அவர் வழி வந்த கெமர் இனமும்
இரண்டாம் கெளடின்யா காலம் முக்கியமானது.
சீன சரித்திரக் குறிப்புக்களின் படி சீன மன்னன் சம்பா பேரரசை
(King Of champa) எதிர்த்துப் போராட உதவி கேட்டு ஒரு குழுவை இவனிடம்
அனுப்பியிருக்கிறான். இன்னொரு தூதுக்குழு நாகசேன என்ற புத்த துறவி
மூலம் புத்த மதத்தை பரப்ப வந்தது. ஆனால் அவன் ஆட்சியில் மகேஸ்வரா (சிவா)
வழிபாடு மலையில் இருந்தது. ஆகவே ‘மலைகளின் பிரபு’ என்ற பட்டத்தைச்
சூட்டிக் கொண்டான். பிறகு தன் பெயருக்குப் பின்னால் « வர்மன் » என்ற பெயர்
வரும் விதமாக கெளடின்யா ஜெயவர்மன் ஆனான். அவனோடு இந்தக் கெமர்
மன்னர்களின் வரலாறு வர்மன் என்ற பெயரோடு தொடங்கியது.
கெளடின்யா ஜெயவர்மனின் மகன் ருத்ரவர்மன். கி. பி. 514இல் ஆட்சிக்கு
வந்து சிற்ப வேலைகளைத் தொடங்கி வைத்தான். இதற்கான சிற்பிகளை
தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வந்தான். அவர்களோடு
பிராமணர்களும் வந்தார்கள். பிராமணர்களோடு அரச குடும்பத்திற்கு
தொடர்புகள் உருவாகின.
பிராமணர்களால் சமஸ்கிருதம் அரசாட்சியில் முக்கிய
இடத்தைப்பெற்றது. கடல் மூலம் ரோம் நகரோடான வர்த்தகமும் நடந்தது.
539இல் ருத்ரவர்மனின் மரணத்தைத் தொடர்ந்து புனன் அரசு வீழ்ந்து பல
பிரிவுகளாக பிரிந்தன. ஒரு பிரிவுக்கு வீரவர்மனின் மகன் பஹாவவர்மன்
என்பவன் இருந்ததாகவும் அவன் நாட்டின் தலைநகரமாக பஹாவபுரம்
இருந்ததாகவும் சீனர்களின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பஹாவவர்மனின் நாடு சென்லா (Chenla) என அப்போது அழைக்கப்பட்டது.
அவனுக்குப் பிறகு சித்ரசேனன் ஆளும் உரிமை பெற்று தன் பெயரை
மகேந்திரவர்மன் என மாற்றினான். அவனுக்குப் பிறகு இஷானவர்மன்
ஆட்சிக்கு வந்தான். இவன் ஆட்சியில் தாய்லாந்தின் சில பகுதிகளும்
லாவோஸ் நாட்டின் தென்பகுதியும் கம்போடியா முழுவதும் வந்தன.
வியட்நாமை ஆண்டு கொண்டிருந்த சம்பா (Champa) என்ற ஆட்சியோடு
நெருங்கிய தொடர்பு கொண்டு தனது மகளை அந்நாட்டு இளவரசனுக்கு மண
முடித்தான்.
628இல் இஷானவர்மனின் மரணத்தை தொடர்ந்து மன்னனைத் தெரிவு செய்வதில்
குழப்பம் உருவாகி பஹாவவர்மன் – 11 ஆட்சி பொறுப்பேற்றான். ஆனால் அவன்
இஷானவர்மனின் நேரடித் தொடர்பு இல்லாத போதும் ஆட்சிக்கு வந்ததால்
குழப்பம் ஏற்பட்டு ஆட்சி பிளவுபட்டு சிறுத்தது.
654 இல் ஆட்சிக்கு வந்த முதலாம் ஜெயவர்மன் உலக வரலாற்றில் தொடர்ந்து 500
ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கெமர் பேரரசுக்கு அடிக்கல் நாட்டினான்.
இஷானவர்மனின் பேரனான இவன் கடந்த ஆட்சியில் பறிகொடுத்த நிலப்பகுதிகளைக்
கைப்பற்றினான். அவன் மரணத் தைத் தொடர்ந்து ஆட்சி தடுமாறி பிளவுபட்டது.
ஆனாலும் சிறிய நிலப்பகுதியை அவன் மகள் ஜெயதேவி ஆட்சி செய்து கெமர் பேரரசின்
முதலும் முடிவுமான அரசியானாள். இந்நி லையில் இரண்டாம் ஜெயவர்மன் 790இல்
ஆட்சிக்கு வந்தான். ஆனால் இவனைப் பற்றி அக்கால அரபு வர்த்தகர்களால் எழுதி
வைத்த குறிப்புக்கள் பிரமிப்பைக் கொடுத்தன.
(தொடரும்….)
மாத்தளை சோமு, அவுஸ்திரேலியா
மாத்தளை சோமு, அவுஸ்திரேலியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக