புதுடில்லி : இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க தூதரக அதிகாரி, தேவயானி கைது
நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் பணியாற்றும்
அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அடையாள அட்டைகளை, மத்திய அரசு திரும்பப்
பெற்றுள்ளது.விசா மோசடி அமெரிக்காவில்,
இந்திய துணைத் தூதராக பணியாற்றியவர், தேவயானி. இவர், விசா மோசடி வழக்கில்,
இம்மாதம், 12ம் தேதி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது
செய்யப்பட்ட அவரை, அந்நாட்டு அதிகாரிகள் தரக்குறைவாக நடத்தினர். இதற்கு,
இந்தியா கண்டனம் தெரிவித்தது.தேவயானி மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப்
பெற வேண்டும் எனவும், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்,
அமெரிக்காவை, இந்தியா வலியுறுத்தியது. எனினும், அமெரிக்கா இதை ஏற்க மறுத்து
விட்டது.தேவயானிக்கு உயர் பாதுகாப்பு வழங்கும் வகையில், அவரை
இந்தியாவிற்கான ஐ.நா., சபை பிரதிநிதியாக, மத்திய அரசு நியமித்துள்ளது.
ஐ.நா.,வும் இதை ஏற்று, அவருக்கு ஐ.நா., உறுப்பினருக்கான அடையாள அட்டைகளை
வழங்கியுள்ளது. எனக்கு என்னவோ துத்துகுடியில் பிடிபட்ட கப்பலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருப்பது போல் தோன்றுகிறது.......ராணுவ வீரர்களின் ஆதர்ஷ் வீட்டை அபகரித்த தேவயாணிற்கு இவ்வளவு வரிந்துகட்டி கொண்டு வர தேவை இல்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் பணியாற்றும், அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்வதாக, மத்திய அரசு அறிவித்தது.மேலும், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள, அடையாள அட்டைகளை, அவர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், கெடு விதித்தது. நேற்றுடன் இந்தியா விதித்த கெடு முடிவடைந்ததால், அனைவரின் அடையாள அட்டைகளும் ரத்து செய்யப்பட்டதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
தவிர, இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு, புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித அடையாள அட்டையும் வழங்கப்படமாட்டாது எனவும் அரசு அறிவித்து உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு, அடையாள அட்டை வழங்குவதில், எந்த மாதிரியான நடவடிக்கையை கையாளுகிறதோ, அதே மாதிரியான நடவடிக்கைகளை, இந்தியாவிலும் கையாள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய அடையாள அட்டை:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக