புதன், 25 டிசம்பர், 2013

பட்டுக்கோட்டையில் உலக திரைப்பட விழா ( படங்கள் )

 இதுவரை திரைப்படம் பற்றிய எந்த விழாவாக இருந்தாலும் சென்னை தாண்டி சென்றதில்லை. அல்லது பெரு நகரங்களைத் தாண்டி வேறு எங்கும் சென்றதில்லை. ஆனால் த.மு.எ.க.ச திரை இயக்கம் நடத்தும் உலக திரைப்பட திருவிழா சிறு நகரமான பட்டுக்கோட்டையில் 5 நாட்கள் நடந்திருக்கிறது. விழாவை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கவுரவம்பாள் முரசு கொட்டி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஏராளமான இயக்குநர்கள், மற்றும் கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டு திரப்படத்தைப் பற்றி விமர்சனங்களுடன் விழா கலைஞர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சொல்லி செல்கிறார்கள்.;இந்த திரைப்பட திருவிழாவில்.. உலக அளவில் முதுமை பற்றி பேசும் படங்கள் முதல் கொரியா, செக் குடியரசு, இத்தாலி, தென் கொரியா, மெக்சிக்கோ, இங்கிலாந்து, இந்தியா போன்ற 12 நாடுகளைச் சேர்ந்த 25 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. திரை துறையினர் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களிடம் இந்த விழா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.;விசுவல் மீடியா படிக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கல்லூரிகளில் இருந்து திரைப்படத் திருவிழா விற்கு வந்து பார்த்துவிட்டு நாங்களும் இது போன்ற படங்களை எடுப்போம். நிச்சயம் எங்கள் படைப்புகளும் இது போன்ற திருவிழாவில் இடம் பெரும் என்று உறுதிமொழி எடுத்துச் சென்றது சிறப்பு.;இந்த விழாவை ஏன் சிறு நகரமான பட்டுக்கோட்டையில் நடத்த வேண்டும். பெரும் நகரங்களில் இடம் கிடைக்கவில்லையா என்ற நமது கேள்விக்கு.. விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான களப்பிரன்.;த.மு.எ.க.ச வின் திரை இயக்கம் கடந்த 2 ஆண்டுகள் சென்னையில் தான் விழாவை நடத்தியது. சென்னையில் மட்டுமே நடத்துவதை விட சிறு நகரங்களிலும் நடத்தினால் என்ன என்ற கேள்வி எங்களிடம் வந்தது. அதனால் தான் முதலில் மக்கள் கவிஞரின் பட்டுக்கோட்டையை தேர்வு செய்தோம். திருவிழா தொடங்கிய முதல் நாளில் இருந்து முடியும் நாளான செவ்வாய் கிழமை வரை திரை கலைஞர்கள் மட்டும் இன்றி திரை கலைஞர்களாக துடிக்கும் இளைஞர்களும் ஆர்வமாக வந்து படம் பார்த்துவிட்டு இத்தனை நல்ல படங்களையும் படைக்க முடியும் என்பதை அறிந்து கொண்டதுடன். நாங்களும் படம் எடுப்போம். அந்தப் படங்கள் இது போல பேசும் படங்களாக இருக்கும் என்று சபதம் எடுத்துச் செல்கின்றனர்.கல்லூரி மாணவர்களுக்கு இந்த விழா உந்து சக்தியாக உள்ளது. இந்த வரவேற்பை பார்த்தோம் பெரு நகரங்களை விட சிறு நகரங்களிலும் நல்ல வரவேற்பும் கலைஞர்களை உருவாக்கும் பட்டரையாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டோம். இனி ஒவ்வொரு விழாவும் சிறு நகரங்களில் தான் நடக்கும்.



 இப்போது திரையிட்ட படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தகவலை பிரதிபலிக்கும். இயக்குநர் சீனுராமராமி இந்த படங்களைப் பார்த்துவிட்டு நானும் பெரிய படங்களுடன் குறும் படங்களையும், ஆவணப் படங்களையும் எடுப்பேன். அதற்கான சில சிறுகதைகளையும் தேர்வு செய்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.


 தொழில் நுட்பம், ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே இதில் வேறுபட்டு இருக்கும் என்றார்.
nakkheeran.in

       - இரா.பகத்சிங்

கருத்துகள் இல்லை: