செவ்வாய், 24 டிசம்பர், 2013

கனடாவில் பனிப்புயல்:24 மணி நேரமாக Toronto பல இடங்களில் மின்சாரம் கிடையாது


நமது தமிழக வாசகர்கள் “அம்மா நல்லாட்சியில் தினமும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லை” என்று அங்கலாய்க்கிறீர்களே… இங்கே கனடாவில் நம்ம கதி தெரியுமா? கடந்த 24 மணி நேரமாக டொரண்டோ நகரில் பல இடங்களில் மின்சாரம் கிடையாது.
சமீப காலத்தில் ஏற்பட்ட பனிப்புயல்களின் உச்சம் என்று சொல்லும் விதத்தில், ஸ்னோ வாரிக் கொட்டுகிறது.
கிழக்கு கனடாவில் மொத்தம் அரை மில்லியன் மக்கள் நேற்று முதல் மின்சாரம் இன்றி தவிக்கிறார்கள். இதில் விறுவிறுப்பு.காம் தலைமை அலுவலகம் இயங்கும் டொரன்டோ நகரில் மட்டும், 3 லட்சம் பேர் மின்சாரமின்றி இருக்கிறார்கள். முடிந்தவரை வீட்டுக்கு உள்ளேயே தங்கியிருங்கள். யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரங்களில் படிந்த நீர் பனிக்கட்டியாகி, மேலும் பனிக்கட்டி சேரச் சேர, பாரம் தாங்காமல் மரங்கள் முறிந்து விழுகின்றன. மரத்தின்மேல் ஐஸ் படிந்தால் எப்படியிருக்கும் தெரியுமா? அதை 3-வது போட்டோவில் பாருங்களேன்.
கிருஸ்துமஸ் விடுமுறை வாரத்தில் இப்படியொரு மோசமான பனிப்புயல் அடித்ததில், டொரன்டோவில் இருந்து கிழக்கே செயின்ட் ஜோன்ஸ் நகர ஏர்போர்ட் வரை, பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. ஒவ்வரு மணிநேரமும் விமானங்கள் ரத்து செய்யப்படும் அறிவித்தல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த 15 மணி நேரமாக விமானம் கிடைக்காமல் காத்திருக்கும் பயணிகளையும், டொரன்டோ ஏர்போர்ட்டில் காணலாம்.
அட, நீங்கள் இங்கே டொரன்டோவில் இல்லையா.. நம்ம ஏர்போர்ட்டை 4-வது போட்டோவில் பாருங்கள்.
“கிழக்கே போகும் பிளேனு எப்ப கிளம்பும் வாத்யாரே?” என்று கேள்வி கேட்காமல், விதியை நொந்தபடி இருக்கும் நம் சக கனேடியர்களை அந்த போட்டோவில் பாருங்கள். கேள்வி கேட்டு பலனில்லை.. காரணம் வாத்யாருக்கே பதில் தெரியாது!
வெளியே காரை நிறுத்திவிட்டு சிறிது நேரத்தின் பின் வந்து பார்த்தால், கார் முழுவதையும் ஸ்னோ மூடிவிடுகிறது. அவ்வளவு ஸ்னோவையும் வழித்துப் போட்டுவிட்டுதான் காரை கிளப்ப வேண்டும்.
அட, கொஞ்சம் பொறுங்க சார்.. முதலில் காலால் லைசென்ஸ் பிளேட்டில் உள்ள ஸ்னோவை தட்டி, கார் உங்களுடையதுதானா என்பதை முதலில் செக் செய்து கொள்ளுங்கள். (இந்த குளிர் நேரத்தில் வேறு ஒருவருடைய காரில் ஸ்னோவை தள்ளிக்கொண்டு இருக்க கூடாது அல்லவா?) ஸ்னோ மூடிய கார் எப்படியிருக்கும் என்பதை 6-வது போட்டோவில் பாருங்கள்.
ஏர்போர்ட்டில் விமானத்தில் ஏறி அமர்ந்தாலும், விமானம் புறப்படும் என்பது நிச்சயமில்லை. காரணம், டீ-ஐசிங் (de-icing) செய்யப்பட வேண்டும். டீ-ஐசிங் என்பது என்னவென்றால், விமானத்தின் விங், மற்றும் டெயிலில் பனி படர்ந்து விட்டால், விமானத்தை சரியாக இயக்க முடியாது. அதற்காக ஒரு திரவத்தை விமானத்தின் டெயிலிலும், விங்கிலும் அடிப்பார்கள். பனி கரைந்து போகும்.
அப்பாடா.. உடனே விமானத்தை கிளப்ப வேண்டியதுதானே.. பொறுங்க சார்!
டீ-ஐசிங் மூலம் ஸ்னோவை அகற்றிவிட்டு, ரன்வே கிளியரன்ஸ் கிடைக்க காத்திருக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால்….. ஆம், மீண்டும் ஐஸ் படிந்துவிடும். மீண்டும் டீ-ஐசிங் செய்ய வேண்டும். அதற்கான வாகனம், வேறு பிளேனுக்கு டீ-ஐசிங் செய்வதில் பிசியாக இருக்கும்.
அந்த டீ-ஐசிங் வாகனத்துக்காக 1 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
இப்படியே சில விமானங்களுக்கு 4, 5 தடவைகள்கூட டீ-ஐசிங் செய்யப்பட்டும், இன்னமும் புறப்படாமல் நிற்கின்றன. ஓகோ.. டீ-ஐசிங் செய்யப்படுவதை நீங்கள் பார்த்ததில்லையோ.. வாங்க சார் 8-வது போட்டோவுக்கு.
இவ்வளவு இக்கட்டிலும் நம்ம கனேடியர்கள் செய்யும் காரியத்தை 9-வது போட்டோவில் பாருங்கள்… கனேடியர்கள், கனேடியர்கள்தான்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: