தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகாலத்தில் 3213 கொலைகளும் 1170
கொள்ளைகளும் அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுள்ளது என்று திமுக தலைவர்
கருணாநிதி சாடியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில்
நேற்று அவர் பேசியதாவது:
இங்கே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கருணாநிதியும்,
கழகத்திலே உள்ள சிலரும் பேசுகிறார்கள்; எங்கே சட்டம் ஒழுங்கு கெட்டது என்று
எங்களுக்குச் சவால் விடுகின்ற வகையிலே இன்று நடைபெறுகின்ற ஆட்சியிலே
உள்ளவர்கள் - முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பேசுகிறார்கள்; கேள்வி
கேட்கிறார்கள்; கிண்டல் செய்கிறார்கள்; சாபம் கொடுக்கிறார்கள்; எங்களை எந்த
அளவிற்கு வசைமாரி பொழிய வேண்டுமோ அந்த அளவிற்கு வசைமாரி பொழிந்து
கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களுக்கும் உங்களுக்கும் தெளிவு படுத்துவதற்காக ஒரு புள்ளி
விவரத்தைச் சொல்லுகின்றேன்.
3231 கொலைகள்- 1170 கொள்ளைகள்.. இதுதான் அதிமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு: சாதனை சாதனை சாதனை !
கருணாநிதி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு கெட்டுவிட்டது என்பதற்கு
உதாரணங்கள்!
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு; இந்த இரண்டரை ஆண்டுக்
காலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி ஆகியிருக்கிறது என்பதற்கு, நான்
படிக்கின்ற பட்டியல் ஒரு உதாரணம் ஆகும்.
கொலைகள் மாத்திரம் இந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் 3231.
கொள்ளைகள் 1170
வழிப்பறி மோசடிகள் 691
செயின் பறிப்புகள் 652
3231 கொலைகள் நடைபெறக் காரணமான இந்த ஆட்சியைப் பற்றியா, சட்டம் ஒழுங்கைப்
பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என்று எங்களை ஏகடியம் செய்கின்ற அ.தி.மு.க.
நண்பர்களுக்கு, அ.தி.மு.க.வின் தலைவி யாருக்கு இந்த எண்ணிக்கையை நான்
சமர்ப்பிக் கின்றேன்.
இல்லை என்று மறுத்தால் நான் அதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.
ஆனால், இரண்டரை ஆண்டுக் காலத்திலே சட்டம் ஒழுங்கு இந்த பாடுபட்டிருக்கிறது
என்றால், மூவாயிரத்து இருநூறு கொலைகள் நடந்திருக்கின்றன. என்றால், அதற்கு
என்ன காரணம்? எப்படி இது நடைபெற்றது? இந்த ஆட்சியிலே 3200 கொலைகளும்,
1000க்கு மேற்பட்ட கொள்ளைகளும், 690க்கு மேற்பட்ட வழிப்பறிகளும், 652
செயின் பறிப்புகளும் நடைபெற்றிருக்கின்றன என்றால், இதற்கு ஒரு பாராட்டு
விழா நடத்த வேண்டாமா என்று ஜெயலலிதா அம்மையார் கேட்டாலும்
ஆச்சரியப்படுவதிற்கில்லை.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக