புதன், 21 ஆகஸ்ட், 2013

திருச்சி மாணவி சுல்தானா சாவுக்கு காரணம் யார்?


மர்ம கடிதத்தால் பரபரப்பு திருச்சியில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த மாணவி சாவுக்கு காரணம் யார், என்பது பற்றி மர்ம கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் தவ்பீக் சுல்தானா(13). மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 8ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 14ம் தேதி எ.புதூர் ரெட்டைமலை அருகே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இவ்வழக்கு எ.புதூர் போலீசு க்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கல் லூரி மாணவர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரி த்து வருகின்றனர். தற்போது இவ்வழக்கு பாலக்கரை போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) போலீ சாருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. தாமஸ் என்பவர் எழுதியிருந்த அந்த கடித த்தை, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமாரிடம் ஒப்படைத்தனர்.அந்த கடிதத்தில் எழுதியிருந்தது பற்றி போலீசார் கூறியதாவது: மாணவி சுல்தானாவுக்கும், அரியமங்கல த்தை சேர்ந்த 2 பேருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தான் சுல்தானாவை எ.புதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுல்தானா, அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை இருவரும் சேர்ந்து மடக்கி பிடித்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள், நீ உயிரோடு இருந்தால் எங்களுக்கு பிரச்னை என்று கூறி இருவரும், சுல்தானாவை அன்று இரவு ரெட்டைமலை பகுதிக்கு அழைத் துச் சென்று தண்டவாளத்தில் போட்டு கொன்றுள்ளனர் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதை அந்த நபர் 12 பாயின்ட்டுகளாக எழுதியுள்ளார். இந்த கடிதத்தை எழுதிய தாமஸ் யார், அவருக்கு இந்த தகவல்கள் எப்படி தெரியும், அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மை தானா என்பது குறித்து விசாரிக்க துணை கமிஷனர் அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி வழக்கில் இன்ஜினியரிங் மாணவர்களான காஜாமலை உமர்பாரூக், பொன்மலைப்பட்டி வினோத்குமார், எ.புதூர் விக்கி (எ) விக்னேஷ், சுசில், சகாய அலெக்ஸ் ஆகிய 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 18ம் தேதி உமர்பாரூக், வினோத்குமார் ஆகிய இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு, விசாரணைக்கு தேவைப்பட்டால் வரவேண்டும் என கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து சுசில், அலெக்ஸ், விக்னேஷ் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் 3 பேரின் பெற்றோர்களை வரவழைத்த போலீசார் அவர்களிடமும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலையா? திடீர் திருப்பம்
சுல்தானா சடலத்தை போஸ்ட் மார்டம் செய்த டாக்டர்கள் மற்றும் விசாரணை நடத்தி வரும் போலீசார் இணைந்து நடத்திய ஆலோசனையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தானா உடல் கிடந்த தண்டவாளம் அகலரயில் பாதையாகும். இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1.67 மீட்டர். ஆனால் சுல்தானாவின் உயரம் சுமார் 1.55 மீட்டர் மட்டுமே இருந்துள்ளது. எனவே யாரும் கொலை செய்து உடலை ரயில்வே பாதையில் படுக்கை நிலையில் வைத்திருந்தால் தண்டவாளங்களுக்கு இடையில் மட்டுமே உடல் கிடந்திருக்க வேண்டும். துண்டாக வாய்ப்பு இல்லை.
மேலும் சுல்தானா பள்ளிக்கூடத்திற்கு எடுத்து சென்ற பையில் ( பின்புறம் மாட்டிச்செல்லும் வகையிலான பை) காலியான டிபன் பாக்ஸ், பரீட்சை அட்டை இருந்தன. சம்பவத்திற்கு பின்னர் கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்த டிபன்பாக்ஸ் நசுங்கிய நிலையிலும், பரீட்சை அட்டை முற்றிலும் வளைந்த நிலையிலும் இருந்தன. சுல்தானா இறந்த பிறகு மீண்டும் அவரது பின்புறம் பையை மாட்டியிருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவர் பையை மாட்டியிருந்த நிலையில் தான் ரயிலில் சிக்கியிருக்க வேண்டும்.

சம்பவத்தன்று அந்த ரயில்பாதையில் மாலை 6.30 மணிவாக்கில் பெண் ஒருவர் நடந்து சென்றதை ஆடுமேய்த்த நபர் ஒருவர், வயல் வேலைக்கு சென்ற நபர் ஒருவர், மற்றொருவர் என 3 பேர் பார்த்துள்ளனர். இது தொடர்பான தகவலும் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் ஏன் சுல்தானா? தற்கொலை செய்திருக்க கூடாது என்கிற அடிப்படையிலும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்nakkheeran.in

கருத்துகள் இல்லை: