
மேலும் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் ரிலையன்ஸ் குழுமத்துக்கும் ஸ்வான் நிறுவனத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி நீதிமன்றங்களில் அனில் அம்பானி, டினா அம்பானி முறையீடு செய்து பார்த்தனர். ஆனால் அவர்கள் முறையீட்டுக்குப் பலனில்லை. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ஆஜராகிறோம் என்று இருவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர். இதனால் இன்று அனில் அம்பானியும் நாளை டினாவும் ஆஜராக கடந்த மாதம் சிபிஐ நீதிமன்றம் புதிய சம்மனை அனுப்பியது. ஆனாலும் அனில் அம்பானி மீண்டும் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை அனில் அம்பானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, ஏராளமான போர்டு மீட்டிங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். என்னால் அவற்றை நினைவுபடுத்த முடியவில்லை, ஆவணங்களில் உள்ளவைதான் உண்மையானவை என்றார். அதற்கு நீதிபதி ஓபி ஷைனி, நீங்கள் பொய்யான ஆவணங்களை பரமாரிக்கவில்லை.. உங்களது ஆவணங்கள் நிச்சயமாக சரியானதுதானா என்றார். அதற்கு பதிலளித்த அனில் அம்பானி, நிச்சயமாக ஆவணங்கள் அனைத்தும் சரியானவையே என்றார். மேலும் போர்டு மீட்டிங்குகளில் எழுதப்படும் குறிப்புகள் என்னால் எழுதப்படுவை அல்ல. என்னுடைய பணியாளர்களால் எழுதப்படுகிறவை என்றும் அனில் அம்பானி சுட்டிக்காட்டினார். சிபிஐ தரப்பில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கும் அனில் அம்பானி, நினைவில்லை, தெரியவில்லை என்றே பதிலளித்தார் அனில் அம்பானி. மேலும் 2008 ஆம் ஆண்டு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டதை அறிவீர்களா? என்று சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனில் அம்பானி, "ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம் பற்றியே நான் கேள்விபட்டதே இல்லை என்று ஒரே போடுபோட்டுவிட்டார். ஆனால் தகவல் தொடர்புத் துறை அமைச்சர்களான பிரமோத் மகாஜன், ஆ. ராசா, கபில் சில என பலரையும் பல நேரங்களில் தாம் சந்தித்திருக்கிறேன் என்றா
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக